அறிமுக இயக்குநர் ஜான்சன்.கே இயக்கத்தில், சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'A1' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரையும் கவர்ந்ததால், குடும்பத்தோடு பார்த்து ரசித்தார்கள். இதனால், இப்படம் மூலம் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரும் லாபம் அடைந்தார்கள்.
இந்த நிலையில், இயக்குநர் ஜான்சன்.கே மற்றும் சந்தானம் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்கள். இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் பூஜையுடன் நடைபெற்றது. ‘A1' படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன், இப்படத்திற்கும் இசையமைக்கிறார். ஆர்தர் கே.வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார்.

A1 படம் போலவே முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக உருவாகும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே.குமார் தயாரிக்கிறார்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...