தமிழ் பிக் பாஸ் சீசனில் ரசிகர்களின் பேவரைட் போட்டியாளராக திகழ்ந்தவர் தர்ஷன். இலங்கை தமிழரான இவர் தான் பிக் பாஸ் டைடில் வெல்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் இறுதிப் போட்டியில் கூட பங்கேற்க முடியாமல் போனது. இருந்தாலும், ரசிகர்கள் அதிகமாக தர்ஷனை தான் விரும்புகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியிலேயே கமல்ஹாசன், தர்ஷனை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்கப் போவதாக அறிவித்தார். மேலும், பல சினிமா வாய்ப்புகள் தர்ஷனுக்கு கிடைத்தது. ஆனால், கமல் தயாரிக்கும் படம் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவது தான் தர்ஷனின் விருப்பம்.
அதே சமயம், பிக் பாஸ் போட்டி முடிந்த பிறகு இலங்கை சென்ற தர்ஷன், அப்படியே மலேசியா, லண்டன் என்று வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவரை தொடர்புகொள்ளவே முடியவில்லை.
இந்த நிலையில், சென்னை வந்திருக்கும் தர்ஷன், தான் ஹீரோவாக நடிக்க இருக்கும் பட வேலைகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தர்ஷன் ஹீரோவாக நடிக்க இருக்கும் படத்தின் அறிவிப்பு ஜனவரி 25 ஆம் தேதி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக இருக்கிறதாம்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...