பிரபல திரைப்பட பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே சமயம், இந்த விஷயத்தில் ஒரு தரப்பினர் சின்மயிக்கு ஆதரவாகவும், ஒரு தரப்பினர் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்ததோடு, சின்மயியை பின்பற்றி மேலும் சிலரும் வைரமுத்து மீது புகார் அளித்தார்கள்.
சுமார் ஒரு வருடமாக நீடித்த இந்த சர்ச்சை, தற்போது அடங்கிவிட்டாலும், பாடகி சின்மயி மட்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், வைரமுத்துவுக்கு எதிராக காட்டமாக கருத்து வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய வைரமுத்து, “பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட சமூக தீமைகளுக்கு காரணமான மதுவை ஒழிக்க வேண்டும்” என்று கூறினார்.
வைரமுத்துவின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் சின்மயி, “அப்போ 20-30 வருஷம் முன்னாடி ஒழிச்சிருந்தா நாங்க தப்பிச்சிருப்போம்ல” என்று தெரிவித்துள்ளார்.
வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார் தெரிவித்ததால், அவர் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட, சில வருடங்கள் டப்பிங் பேசாமல் இருந்தார். தற்போது மீண்டும் டப்பிங் பேச தொடங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Appo 20-30 varsham munnadi ozhichirundha naanga thappichuruppomla. https://t.co/juTVzAHfeJ
— Chinmayi Sripaada (@Chinmayi) January 21, 2020
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...