தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் அஜித், தனது ரசிகர் மன்றங்களை பல ஆண்டுகளுக்கு முன்பு கலைத்துவிட்டதோடு, தனக்காக ரசிகர்கள் எதுவும் செய்ய வேண்டாம், அவர் அவர் குடும்பத்தை பாருங்கள், என்று அறிவித்துவிட்டார். இருந்தாலும், அஜித்தின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது ரசிகர்கள், அதை விழாவாகவே கொண்டாடி வருகிறார்கள்.
அஜித்தை மட்டும் இன்றி அவரது மனைவி ஷாலினி மற்றும் அவரது குழந்தைகளின் பிறந்தநாள் என்று அனைத்திற்கும் போஸ்டர் அடித்து, பேனர் கட்டி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு அஜித் ரசிகர்கள், அஜித் புகைப்படம் கொண்ட காலண்டர் ஒன்றை அச்சடித்துள்ளார்கள். அந்த காலண்டரை பிக் பாஸ் பிரபலம் நடிகை மதுமிதாவும், அவரது கணவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

அஜித் ரசிகர்களுக்கு மட்டும் இன்றி, திரை பிரபலங்களுக்கும் இந்த காலண்டரை விநியோகம் செய்ய அஜித் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளார்களாம்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...