கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ‘கே.ஜி.எப்’ என்ற கன்ண்ட திரைப்படம் கன்னடம் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெற்றி பெற்றது. கன்னட சினிமாவின் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவரான யாஷ் நடிப்பில் வெளியான இப்படம், கோலார் தங்க வயலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆக்ஷன் படமாகும்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பிரம்மாண்டமான செட் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையால் வெற்றி பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘கே.ஜி.எப் : சேப்டர் 2’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை காட்டிலும் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இப்படத்தில் இந்திரா காந்தியின் வேடமும் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தில் இந்திரா காந்தியை ஒரே ஒரு ஷாட்டில் முகம் தெரியாதவாறு காட்டப்பட்ட நிலையில், இரண்டாம் பாதியில், இந்திரா காந்திர்க்கும் கோலார் தங்க வயலுக்கும் இருந்த தொடர்பு குறித்து விரிவாக பேசப்பட்டிருப்பதோடு, இந்திரா காந்தியின் சில அரசியல் ரகசியங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்களாம்.
இந்திரா காந்தி வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டூன் நடிக்கிறார். அதே சமயம், படத்தில் இந்திரா காந்தியின் வேடத்தை, இந்திரா காந்தி என்று அழைக்கிறார்களா அல்லது வேறு எதாவது பெயர் வைத்திருக்கிறார்களா, என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், 80-களில் நடைபெற்ற அரசியல் மற்றும் மறைக்கப்பட்ட சில அரசியல் ரகசியங்கள் குறித்து பேசப்படுவதால், பல சர்ச்சைகள் எழும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...