அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் “கண்ணானே கண்ணே...”, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் “மறு வார்த்தை பேசாதே...” உள்ளிட்ட பல பாடல்களை தனது வசீகர குரலால் சூப்பர் ஹிட்டாக்கியவர் சித் ஸ்ரீராம். தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி பாடகராக இருக்கும் இவரது குரலில், சமீபத்தில் வெளியான ‘சைக்கோ’ பட பாடல்களும் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இப்படி தனது வசீகர குரலினால் ரசிகர்களின் இதயத்திற்குள் ஆழமாக இறங்கியிருக்கும் சித் ஸ்ரீராம், தென்னிந்தியா முழுவதும் இசைப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
‘ஆல் லவ் நோ ஹேட்’ என்ற தலைப்பில் சித் ஸ்ரீராம் மேற்கொள்ள இருக்கும் இந்த இசைப் பயணம், வருகிற பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘நாய் அண்ட் கிரைண்ட்ஸ்’ (Noise and Grains) என்ற நிறுவனம் தான் சித் ஸ்ரீராமின் தென்னிந்திய இசைப் பயண நிகழ்ச்சியை நடத்துகிறது.
இசை நிகழ்ச்சிகள், நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சிகளை உருவாக்கி, தயாரித்து வழங்குவதில் முதன்மை நிறுவனமாக திகழும் இந்நிறுவனம், இந்தியா மற்றும் சிங்கப்பூரில் ஏ ஆர் ரஹ்மானின் ‘நெஞ்சே எழு’, இளையராஜாவின் ‘இளையராஜா 75’, அனிருத்தின் ‘சிங்கப்பூர் லைவ்’, நடிகர் விஜய் சேதுபதியுடன் 'நம்ம ஊரு ஹீரோ', எஸ் பி பாலசுப்பிரமணியம் - யேசுதாசுடன் 'வாய்ஸ் ஆப் லெஜண்ட்ஸ்' இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஆண்ட்ரியா, சின்மயி, ஹரிஹரன், ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் பலருடன் இணைந்து ‘மடை திறந்து’ இசை நிகழ்ச்சி தொடர்களை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 8 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக துவங்கும் இந்நிகழ்ச்சி, அதனை தொடர்ந்து பிப்ரவரி 23 ஆம் தேதி கொச்சினிலும், மார்ச் 7 ஆம் தேதி மதுரையிலும் மற்றும் மார்ச் 13 ஆம் தேதி பெங்களூரிலும் நடைபெறவிருக்கிறது.
இந்த தென்னிந்திய இசைப் பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டுகள் விற்பனை துவங்கி இருக்கிறது.
அனுமதி சீட்டுகளுக்கு www.grabmyticket.com என்ற இணைய தளத்தை அணுகுங்கள்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...