90 களில் தமிழ் சினிமாவின் வசூல் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்த ராஜ்கிரண், தற்போது முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார். ஹீரோக்களுக்கு நிகரான வேடங்களில் நடித்து வருபவர், முதல் முறையாக ‘ஷைலாக்’ என்ற மலையாளப் படத்தில் நடித்திருக்கிறார். தமிழியில் ‘குபேரன்’ என்ற தலைப்பில் இப்படம் வெளியாகிறது.
மம்மூட்டி, ராஜ்கிரண், மீனா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ‘குபேரன்’ படத்தின் தமிழ் பதிப்புக்கு வசனம் மற்றும் பாடல்களையும் ராஜ்கிரண் தான் எழுதியிருக்கிறார்.
அதேபோல், ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் ஜோடியாக நடித்த மீனா மற்றும் ரஜ்கிரண், 28 வருடங்களுக்குப் பிறகு ‘குபேரன்’ படம் மூலம் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். ஆம், இந்த படத்தில் மம்மூட்டிக்கு ஜோடி இல்லையாம். மீனா ராஜ்கிரணுக்கு தான் ஜோடியாம்.
இந்த நிலையில், ’என் ராசாவின் மனசிலே’ படத்தின் போது ராஜ்கிரணின் உருவத்தை பார்த்து பயந்து அவரை கவலையடைய செய்த மீனா, குபேரேன் படத்திலும் அவரை கவலையடைய செய்திருக்கிறாராம்.

இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய ராஜ்கிரண், ”’என் ராசாவின் மனசிலே’ படத்தின் போது என்னை பார்த்து பயந்த மீனா, ‘குபேரன்’ படத்தின் போது பயப்படவில்லை. அதே சமயம், பழைய நினைவுகளைப் பேசுறதுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் கொஞ்சம் கூட நேரம் கிடைக்காமல் போனது வருத்தமாக இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...