தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சோனா, திடீரென்று சொந்தமாக திரைப்படம் தயாரித்தார். ஆனால், அப்படம் தோல்வியடைந்ததால் அவர் மிகப்பெரிய நஷ்ட்டத்தை சந்தித்தார். இதற்கிடையே, பிரபல பாடகர் சரண் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பகிரங்கமாக குற்றம் சாட்டியதோடு, தனது வாழ்க்கையை புத்தகமாக எழுதப் போவதாகவும், அதில் பல பிரபலங்களின் ரகசியங்களும், தன்னை ஏமாற்றியவர்கள் பற்றியும் தெரிவிக்கப் போவதாக கூறினார்.
சோனாவின் இந்த அறிவிப்பால், கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, சர்ச்சையும் வெடித்தது. ஆனால், சோனா அப்படி எதுவும் செய்யாததோடு, தமிழ் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு மலையாள சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.
இந்த நிலையில், மலையாளப் படமான ‘பச்சமாங்கா’ மூலம் சோனா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். விரைவில் வெளியாக உள்ள அப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் சோனா படு கவர்ச்சியான உடையில் தோன்றுவதோடு, சிலருடன் படுக்கையறை காட்சிகளிலும் நடித்திருந்தார். இதனால், சோனா மீண்டும் தனது கவர்ச்சி கலவரத்தை தொடங்கிவிட்டார் என்று கூறப்பட்டதோடு, செய்தியாகவும் பரவியது.

ஆனால், இதை மறுத்திருக்கும் நடிகை சோனா, ‘பச்சமாங்க’ டிரைலரை வைத்து அந்த படம் குறித்தும், எனது வேடம் குறித்தும் தவறாக சித்தரிக்க வேண்டாம். பாலுமகேந்திரா சாரின் படம் போல ரொம்பவே கிளாஸியான படம் தான் ‘பச்சமாங்கா’. அப்படத்தில் எனது வேடம் மிகவும் அழுத்தமாக வேடம், அப்படம் வெளியானால் நான் சொல்வது உண்மை, என்று தெரியும், என்று கூறியிருக்கிறார்.
மேலும், இப்படம் 2 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படமாகும். அதேபோல், இரண்டு வருடங்களுக்கு முன்பே இனி தான் கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு சோனா வந்துவிட்டாராம். அதனால், கவர்ச்சி நடிகை என்று இனியும் சித்தரிக்க வேண்டாம், என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...