சிம்பு நடிப்பில், டி.ஜி.நந்து என்பவரது இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட படம் ‘கெட்டவன்’. இப்படத்தின் போஸ்டர்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியது. ஆனால், சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது. இதையடுத்து இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தை மையமாக வைத்து ‘எள்ளாளன்’ என்ற படத்தை நந்து இயக்கினார். இப்படம் இந்தியாவில் வெளியாகவில்லை என்றாலும், பிரான்ஸ், கனடா, நார்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், இயக்குநர் நந்து தனது பெயரை என்.கே.கண்டி, என்று மாற்றிக் கொண்டு ‘டே நைட்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்ட இப்படம் வெறும் ரூ.10 லட்சத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்விக் விஷுவல் மீடியா மற்றும் பியூசர்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் ஆதர்ஷ், ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஆதர்ஷ் நாயகனாகவும், அன்னம் ஷாஜன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.
மர்டர் மிஸ்டரி ஜானர் படமான இப்படத்தில் பாடல்கள் இல்லை. அதே சமயம், படத்தில் வரும் திகிலும், திருப்பங்களும், திரைக்கதை அமைப்பும் மிக புதுமையாக உருவாக்கப்பட்டுள்ளதாம். மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் வரும் திரைக்கதை அமைப்பு இதுவரை எந்த ஒரு இந்திய சினிமாவிலும் இடம் பெற்றதே இல்லை, என்று இயக்குநர் கண்டி தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் என்.கே.நண்டி, சினிமாவில் தான் எப்படிப்பட்ட பிரச்சினை சந்தித்துள்ளேன், என்பது குறித்து கூறியதோடு, தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் விஷால் குறித்து கிழி கிசி என்று கிழித்தவர், ஒரு தயாரிப்பாளர் படம் தயாரிப்பதாக கூறி, 7 நடிகைகளுடன் செக்ஸ் டீலிங் போட்டாராம்.
அதற்காக அந்த தயாரிப்பாளரே 7 நடிகைகளை கொண்ட ஆட்டோகிராப் பாணியில் ஒரு கதையையும் எழுதை, அதை இயக்குநர் கண்டியை இயக்க சொன்னாராம். அந்த தயாரிப்பாளர் மற்றும் நடிகைகள் யார் என்ற ரகசியத்தையும் இயக்குநர் கண்டி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த தயாரிப்பாளர் யார்? என்பதை தெரிந்துக் கொள்ள இந்த வீடியோவை பாருங்க,
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...