ரஜினிகாந்த், எது பேசினாலும் அது மிகப்பெரிய சர்ச்சையாகி விடுகிறது. அதேபோல், ரஜினி குடும்பத்தார் எது செய்தாலும், எங்கு சென்றாலும் வதுவும் வைரலாக பரவுகிறது. ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா, சமீபத்தில் தனது குழந்தை விளையாடிய புகைப்படம் ஒன்றை வெளியிட அது மிகப்பெரிய வைர்லானதோடு, சிலர் அதை வைத்து சர்ச்சையான கமெண்டும் தெரிவித்தார்கள்.
இந்த நிலையில், செளந்தர்யா ரஜினிகாந்த், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் தேசிக ஞானசம்பந்த சுவாமிகளை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருமணத்திற்குப் பிறகு திரைப்படம் இயக்குவதில் தீவிரம் காட்டி வரும் செளந்தர்யா ரஜினிகாந்த், ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வெப் சீரிஸாக இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை ‘குயின்’ என்ற தலைப்பில் வெப் சீரிஸாக தயாரித்த எம்.எக்ஸ் பிளேயர் நிறுவனம் செளந்தர்யா ரஜினிகாந்துடன் சேர்ந்து இந்த வெப் சீரிஸை தயாரிக்க உள்ளதாம்.
ஆன்மீகவாதியான ரஜினிகாந்த் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை பல முறை படித்திருக்கிறாராம். அதுபோன்ற வரலாற்று கதைகள் மற்றும் நாவல்கள் என்றால் அவருக்கு அதிகம் பிடிக்கும் என்று பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...