Latest News :

'லிங்கா' திரைப்பட வழக்கு தள்ளுபடி - ரஜினி மீதான களங்கம் நீங்கியது
Sunday January-26 2020

ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘லிங்கா’ திரைப்படத்தை ராக்லைன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரித்தார்.

 

முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குக்கின் வாழ்க்கையை தழுவிய இப்படத்தின் கதையை பொன்குமரன் எழுத, கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை எழுதி இயக்கினார். படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, மதுரையை சேர்ந்த ரவிரத்தினம் என்பவர், ‘லிங்கா’ படத்தின் கதை தனது ‘முல்லை வனம் 999’ படத்தின் கதை என்றும், தனது கதையை திருடி தான் ரஜினியை வைத்து ‘லிங்கா’ படத்தை தயாரிக்கிறார்கள், என்று மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிடுவதற்கான பணியில் படக்குழுவின ஈடுபட்டிருக்கும் போது, இந்த வழக்கு அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்த நிலையில், மதுரை நீதிமன்றம் ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு படத்தை ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. அதுவும் சில மணி நேரங்களே கால அவகாசம் இருக்கும் நிலையில், இப்படி ஒரு இக்கட்டான சூழலில் உருவானதால், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், அப்செட்டானாலும், ரஜினி படத்தை சொன்னபடி, சொன்ன தேதியில் வெளியிட வேண்டும் என்பதற்காக, பத்து கோடி ரூபாயை நீதிமன்றத்தில் படத்தையும் ரிலீஸ் செய்தார்.

 

Linga

 

ஆனால், இந்த கதை திருட்டு வழக்கு சுமார் 5 வருடங்களாக நடந்துக் கொண்டிருந்த நிலையில், வழக்கு தொடர்ந்த ரவிரத்தினம், தனது கதை என்பதற்கான சரியான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்க்க முடியாமல், வழக்கை வாபாஸ் பெற்றுவிட, நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. அதன்படி, ‘லிங்கா’ கதை பொன்குமரன் என்பவரால் எழுதப்பட்டது என்பதும், அக்கதை திருட்டு கதை இல்லை என்பதும் நீதிமன்றம் மூலமாகவே நிரூபணம் செய்யப்பட்டதால், ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதையாசிரியர் பொன்குமரன் ஆகியோர் மீது இருந்த களங்கம் நீங்கியது.

 

இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய கே.எஸ்.ரவிக்குமார், “நான் ஒரு கதையை சொல்லும் போது அது சரியாக ரிஜிஸ்டர் செய்திருக்கிறதா என்று பார்த்து தான் செய்வேன். எதிர் தரப்பில் தாக்கல் செய்த எல்லா சாட்சியங்களையும் விசாரித்த பின் எங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்து நல்ல தீர்ப்பை வழங்கினார்கள். ரைட்டர் யூனியனுக்கு இன்னும் பவர் இருக்க வேண்டும். கதைத் திருட்டு சம்பந்தப்பட்ட கேஸ்களில் இப்படி  ஒரு சாதகமான தீர்ப்பு வந்தது எங்களுக்குத் தான் என்று நினைக்கிறேன். கதையை முதலில் ரிஜிஸ்டர் செய்யுங்கள். அதன்பிறகு ரைட்டர் யூனியன் இருக்கிறது அங்கு செல்லுங்கள்” என்றார்.

 

Rockline Venkatesh and KS Ravikumar

 

தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறுகையில், “படம் எடுப்பதே எங்களுக்கு சேலஞ்ச் இருந்தது. படம் எடுத்த கஷ்டத்தை விட அது பெரிய கஷ்டமாக இருந்தது. உடனே பேங்க்ல அப்ரோச் செய்து எப்படியோ சமாளித்தோம். ஒருவேளை அந்த படம் அந்த சந்தர்ப்பத்தில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் என்னாவாகும். அந்த டைமில் இப்படி  வந்து ப்ளாக் மெயில் பண்றது சரியல்ல. அந்த டைமில் ரஜினி சார் எனக்கு ரொம்ப சப்போர்ட் செய்தார். இதைப் போல கடைசி நேரத்தில்  ப்ளாக் மெயில் செய்வது இந்த திரைப்பட துறைக்கு  நல்லதல்ல. உண்மை ஒருநாள் வெல்லும் என்று எங்கள்  படத்தில் வரும் அந்தப் பாட்டு மாதிரி உண்மை தான் ஜெயிக்கும். சினிமா இண்டஸ்ட்ரிக்கு இந்த மாதிரி இனி வரக்கூடாது. இந்தப் பிரச்சனை இனி வராமல் இருக்க ரைட்டர் யூனியன் டைரக்டர் எதாவது ஒருவழி செய்ய வேண்டும். கோர்ட்டுக்கு அதிக முறை  அலைந்துள்ளேன். அங்கு போய் நின்று பதில் சொல்ல வேண்டும். அது நிறைய மெண்டல் பிரஷர் தந்தது. தற்போது தவறை  செய்தவர்களுக்கு தெரிந்து விட்டது. அதனால் அவர்கள் மேல் நான் வழக்கு எதுவும் போடப்போவதில்லை. நானும் ரஜினி சாறை பின்பற்றுபவன்  தான். இனி இப்படி நடக்கக்கூடாது என்று மீடியா மூலமாக கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

 

மேலும் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பதில் அளித்துப் பேசியதாவது, “பணம் கேட்டு மிரட்டினார்கள். நிறைய பேர் பேரம் பேசி முடிக்கலாம் என்றும் சொன்னார்கள். நான் பத்தாயிரம் ரூபாய் கூட கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். எதுவா இருந்தாலும் கோர்டில் பார்த்துக் கொள்கிறேன் என்றேன். இனி ரஜினி சார் படம் தயாரிப்பது குறித்து ரஜினி சார் முடிவு செய்ய வேண்டும். என் வாழ்க்கையில் ரஜினி சாரை வைத்து ஒருபடம் தயாரித்தேன் என்ற திருப்தி போதும்” என்றார்.

Related News

6154

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

திரைப்பட தயாரிப்பில் இறங்கிய 'நாய்ஸ் அண்டு கிரைன்ஸ்'!
Saturday July-12 2025

திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...

தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘மார்ஷல்’!
Saturday July-12 2025

‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...

Recent Gallery