தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, கதையின் நாயகனாக நடித்த அனைத்துப் படங்களும் நல்லாவே கல்லா கட்டியது. இதனால், யோகி பாபுவை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்க பலர் வரிசையில் நிற்கிறார்கள். இருந்தாலும், அந்த வரிசையை தவிர்த்த யோகி, வருடத்திற்கு ஒரு படம் மட்டும் அப்படி நடிப்பேன், மற்றபடி காமெடி நடிகராக அதிகப் படங்களில் நடிப்பேன், என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
யோகி பாபுவின் இந்த முடிவுக்கு காரணம், ஓடி..ஓடி...,கோடி கோரியாக பணம் சம்பாதித்தாலும், நடக்க வேண்டிய வயதில் நடக்க வேண்டியது நடக்காமல் போய்விடுமோ, என்பது தான். ‘
ஆம், நேரம் பார்க்காமல் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட யோகி பாபுவுக்கு, அவரது பெற்றோர்கள் பல வருடங்களாக பெண் தேடி வர, ஒரு கட்டத்தில் அவர்களே சோர்ந்து விட்டார்களாம். இதனால், படப்பிடிப்பில் கவனம் செலுத்துவதோடு, தனது உடல் எடையை குறைப்பதிலும் கவனம் செலுத்த தொடங்கிய யோகி பாபு, நேரத்திற்கு சாப்பிடுவது, நேரத்திற்கு தூங்குவது என்று உடற்பயிற்சி ஆசிரியரின் யோசனையை பாலோ செய்வதால், உழைப்பதை சற்று குறைத்துக் கொள்ள முடிவு செய்துவிட்டார்.
அவரது இந்த முடிவுக்கு தற்போது வெற்றியும் கிடைத்துவிட்டது. யோகி பாபுக்கு பெண் கிடைத்துவிட்டது. பார்கவி என்ற பெண்ணை யோகி பாபு மணக்கப் போகிறார். அவரது பெற்றோர்கள் பார்த்த இப்பெண் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் தானாம்.
யோகி பாபு - பார்கவி திருமணம் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் நடைபெற இருக்கிறதாம்.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...