கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படமான ‘அர்ஜுன் ரெட்டி’ மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. உலகம் முழுவதும் ரிலிஸாகியுள்ள இப்படம் சுமார் 50 கோடி ரூபாயை வசூல் செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படத்தினை தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்ய பல முன்னணி நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.
தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் ரீமேக் செய்து நடிக்க ஆசைப்பட்டார். இதற்காக பேச்சு வார்த்தையிலும் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில், விஜய் சேதுபதியும் இந்த படத்தில் நடிக்க விரும்பி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது.
இந்தி மற்றும் தமிழ் ரீமேக் உரிமியை இதுவரை யாருக்கும் விற்கவில்லை என்று அறிவித்த அர்ஜுன் ரெட்டி தயாரிப்பு தரப்பு, பேச்சு வார்த்தை மட்டுமே நடைபெற்று வருவதாக கூறியிருந்தது.
இந்த நிலையில், மலையால சினிமாவைச் சேர்ந்த இ4 எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் மற்றும் இந்தி ரீமேக் உரிமையை பெற்றுள்ளது. இரண்டு மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களை வைத்து திட்டமிட்டுள்ள அந்நிறுவனம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...