தமிழ் சினிமாவில் சாதிக் கொடுமை பற்றி பேசும் திரைப்படங்களின் வருகை அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் ‘புறநகர்’ என்ற படமும் சாதிக் கொடுமை பற்றி பேசும் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.
வள்ளியம்மாள் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜிம்னாஸ்டிக் வீரர் கமல் கோவின்ராஜ் தயாரித்து, ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தை ஸ்டண்ட் இயக்குநரான மின்னல் முருகன் இயக்கியிருக்கிறார். இதில் ஹீரோயினாக சுகன்யா, அஸ்வினி சந்திரசேகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தேனி முருகன், கதிரவ கண்ணன், செல்வம், தயாளன், ரகு, கணேஷ், தாம்பரம் சிங்கம் ஆகியோர் நடிக்க, அனல் அண்ணாமலை வில்லனாக நடித்திருக்கிறார்.

விஜய் திருமூலம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு இ.எல்.இந்திரஜித் இசையமைத்திருக்கிறார். ரா.தேவன், செல்லமுத்து, கானா லாலா ஆகியோர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். ஜெய்மோகன் எடிட்டிங் செய்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் மின்னல் முருகன் கூறுகையில், “சாதிப் பிரச்சனையால் சமுதாயத்தில் வாழ முடியாத நாயகன் புகலிடம் தேடி புறநகரில் தஞ்சமடைகிறார். அந்த இடத்திலும் சமூகம் அவரை வாழவிடமால் செய்கிறது. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நாயகன் எத்தகைய முயற்சிகளை எடுக்கிறார் என்பதை கமர்ஷியலாக சொல்லும் படம்தான் ‘புறநகர்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பை சென்னையைச் சுற்றிய புறநகரில் படமாக்கினோம். ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தாலும் சண்டைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் அனைவரும் ரசிக்கும்படியான படமாக எடுத்துள்ளேன்’’ இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கானா பாடல்கள் இந்த வருடத்தின் வெற்றிப்பாடல்கள் வரிசையில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.” என்றார்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...