சினத்திரையில் இருந்து வெள்ளித்த்திரையில் எண்ட்ரியான நடிகைகள் பலர் முன்னணி ஹீரோயினாக உயர்ந்திருப்பது போல, பலர் காணாமலும் போயிருக்கிறார்கள். அந்த வகையில், ‘மேயாத மான்’ படம் மூலம் வெள்ளித்திரைக்கு எண்ட்ரியான டிவி நடிகை பிரியா பவானி சங்கர், தற்போது முன்னணி ஹீரோயினாக வளர்ந்து வருகிறார். அவரது பாணியை பின்பற்றி மற்றொரு சீரியல் நடிகையான வாணி போஜனும், தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
‘தெய்வ மகள்’ சீரியலில் சத்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமான வாணி போஜனுக்கு, சினிமா வாய்ப்புகள் வந்தாலும், நல்ல கதைக்காகவும், கதாப்பாத்திரத்திற்காகவும் காத்திருந்தவர், இதுக்குமேல் வெயிட் பண்ணா வேலைக்கு ஆகாது, என்ற முடிவில், நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் ‘லாக்கப்’ படத்தில் கமிட்டானார். அப்படத்தை தொடர்ந்து தெலுங்குப் படம் ஒன்றிலும், ‘ஓ மை கடவுளே’ படத்திலும் ஒப்பந்தமானார்.
அவர் நடித்த முதல் படமான ‘லாக்கப்’ வெளியாகமல் இருக்கும் நிலையில், இரண்டாவதாக ஒப்பந்தமான ‘ஓ மை கடவுளே’ படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘ஓ மை கடவுளே’ படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. ரொமாண்டிக் காமெடிப் படமான இப்படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாகவும், ரித்திகா சிங் ஹீரோயினாகவும் நடித்திருக்க, வாணி போஜனுக்கு என்ன வேடமாக இருக்கும் என்பது பெரும் எதிர்ப்பார்ப்பாக இருந்த நிலையில், தற்போது அதற்காக விடை கிடைத்திருக்கிறது.
வாணி போஜன் படத்தில் அக்கா வேடத்தில் நடித்திருக்கிறார். அதாவது, அசோக் செல்வனை விட அதிக வயதுடைய பக்கத்து வீட்டு பெண் வேடமாம். அவரை அசோக் செல்வன், அக்கா என்று அழைக்க, அதே சமயம், வாணி போஜனுக்கும், அசோக் செல்வனுக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக நினைத்து, ரித்திகா சிங் சண்டைப்போடுவது போன்ற காட்சிகள் டிரைலரில் இடம் பெற்றுள்ளது.
ஆக, முதல் படம் வெளியாவதற்கு முன்பாகவே வாணி போஜனை அக்கா என்ற பெயரில், ஆண்டியாக்கியிருக்கிறார்கள்.
சின்னத்திரை நயன்தாராவை இதுக்குள்ளேயே இப்படி ஒரு வேடத்தில் நடிக்க வைத்திருக்கும் கோலிவுட், போக போக எப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க வைக்கப்போகிறதோ, என்று அவரது ரசிகர்கள் கவலை அடைந்திருக்கிறார்கள்.
பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயரிக்க எம்...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...