Latest News :

இளைஞர்களை கவரும் காதல் படமாக உருவாகியுள்ள ‘ஓ மை கடவுளே’!
Sunday February-02 2020

சினிமாவில் எத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்தாலும், காதல் கதைக்கு என்று தனி இடமும், ரசிகர்களும் உண்டு. எந்தக் காலக்கட்டமானாலும் காதல் படங்கள் ரசிகர்களை கவரக்கூடிய படமாகவே இருக்கும். அந்த வகையில், அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ மை கடவுளே’ அட்டகாசமான இளைஞர்களை கவரக்கூடிய காதல் படமாக உருவாகியுள்ளது.

 

இப்படத்தின் டீஸர், புரமோ பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திரங்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது. ஏற்கனவே விஜய்சேதுபதி இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்கிற நிலையில்,  இப்போது அடுத்த ஆச்சர்யமாக, இயக்குநர் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் எனும் செய்தி, ரசிகர்களை உற்சாகம் கொள்ளச்செய்துள்ளது.

 

இது குறித்து தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு கூறுகையில், “இப்படத்தில் சில காட்சித்தொடர்கள் படப்பிடிப்பு தளத்தில் நடப்பது போன்று அமைந்துள்ளது. அந்தக்காட்சிகளில் உண்மையான இயக்குநர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். சினிமாவில் பிரபலமான இயக்குநராக இருக்க வேண்டும் காதல் படங்கள் இயக்குபவராக இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சின் போது அனைவரது தேர்வாகவும் கௌதம் மேனன் இருந்தார். ஆனால் அவர் ஒப்புக்கொள்வாரா ?  எனும் தயக்கம் எங்களிடம் இருந்தது. ஆனால் இயக்குநர் அவரை அணுகி கதையையும், அவரது பாத்திரம் குறித்தும் கூறிய போது அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார். மேலும் வெகு எளிமையாக எங்களுடன் படப்பிடிப்பில் இருந்து நடித்து தந்தார். அவரது காட்சிகளை இப்போது காணும்போது வெகு மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களும் பெரு விருந்து காத்திருக்கிறது. இப்படம் இளைஞர்களை கவரும் அட்டகாசமான காதல் படமாக இருக்கும்.” என்றார்.

 

Director Goutham Menon in Oh My Kadavule

 

அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தை அக்ஸஸ் பிலிம் பேக்டரி (Axess Film Factory) சார்பில் ஜி.டில்லிபாபுவும், ஹப்பி ஹை பிக்சர்ஸ் (Happy High Pictures) சார்பில் அபிநயா செல்வமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

 

தொடர்ந்து பல வெற்றிப் படங்களை வெளியிட்டு வரும் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் தமிழகம் முழுவதும் வெளியிடும் இப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகிறது. 

Related News

6179

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery