கடவுள் பக்தி கொண்டவர்களாகட்டும், கடவுள் இல்லை என்று சொல்பவர்களாகட்டும், யாராக இருந்தாலும் தமிழர்கள் என்ற ஒரு புள்ளியில் இணைந்துவிடுவார்கள். அந்த தமிழ் மொழியின் அடையாளமாக திகழ்பவர்களில் முருகனும் ஒன்று. தமிழர்களின், தமிழ் மொழியின் அடையாளமாக திகழும் முருகனை கவுளாக வணங்காதவர்கள் கூட அவரை அவமதிப்பு செய்ததில்லை. காரணம், அவர் தமிழர்களின் அடையாளம் என்பது தான்.
அப்படிப்பட்ட முருகனை காமெடி நடிகர் யோகி பாபு மூலம் அவதிப்பு செய்திருக்கிறது ‘காக்டெய்ல்’ திரைப்பட குழு. பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிப்பில், விஜய முருகன் என்பவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
இதில், யோகி பாபு முருக கடவுள் போல வேடமிட்டு நிற்கிறார். அவரது அருகில் முருகனின் வாகனமான மயிலுக்கு பதில், வெளிநாட்டு பறவை ஒன்று நிற்கிறது.
விநாயகராக வேடம் போட வேண்டிய யோகி பாபு முருகனாக வேடமிட்டிருப்பதை கூட பொருத்துக் கொள்ளலாம். ஆனால், அவரது வாகனத்திற்கு பதில் வேறு ஒரு பறவையை வைத்து கிண்டல் செய்திருப்பதை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதிலும், காக்டெய்ல் என்ற தலைப்பும், அந்த தலைப்பு டிசைனில் மதுபாட்டிலும் வைக்கப்பட்டிருக்க, அங்கே முருகனை வைத்து அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள்.
ராமருக்கு எதாவது நேர்ந்தால் குரல் கொடுக்க இங்கு பலர் இருக்க, தமிழர்களின் அடையாளமான முருகரை இப்படி கிண்டல் செய்திருப்பதை கேட்க இதுவரை ஒருவர் கூட குரல் எழுப்பவில்லை. குறிப்பாக தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட இதில் மெளனம் காத்து வருவது ஏன்? என்று தான் தெரியவில்லை.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...
ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...