சீன மக்களை அச்சத்தில் உரைய வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் இருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதோடு, சீனாவில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட இந்தியர்களை இரண்டு கட்டமாக விமானம் மூலம் மத்திய அரசு இந்தியாவுக்கு அழைத்து வந்துவிட்டது.
இந்த நிலையில், தமிழ் சினிமா காமெடி நடிகர் போண்டா மணிக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக, யூடியூப் சேனல் ஒன்றில் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். தீயாக பரவும் இந்த செய்தியால், தமிழ் திரையுலகம் அதிர்ச்சியடைந்திருக்கிறது.
இது குறித்து நடிகர் போண்டா மணியை தொடர்புகொண்ட போது, அப்படியா!, என்று ஆச்சரியத்தோடு பேசியவர். தான் நன்றாக தான் இருக்கிறேன். எனக்கு கோரோனாவோ, மொரானோவோ எதுவும் இல்லை, கூறினார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...
ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...