பிக் பாஸ் மூலம் பிரபலமான இலங்கை தமிழ்ப் பெண் லொஸ்லியா. இவருக்கும், கவினுக்கும் இடையே ஏற்பட்ட காதல் தான் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை மக்களிடம் கொண்டு சேர்த்தது. பிக் பாஸ் சீசன் 3 போட்டி முடிந்தும் கூட லொஸ்லியா மக்களிடம் இன்னும் டிரெண்டிங்காகவே இருக்கிறார்.
இந்த நிலையில், லொஸ்லியா தமிழ்ப் படம் ஒன்றில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் ஹீரோவாக பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தான் லொஸ்லியா நடிக்கிறாராம்.
‘பிரண்ட்ஷிப்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை ஷேண்டோ ஸ்டுடியோஸ் & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்க, ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்குகிறார்கள்.

பிரம்மாண்டமான முறையில் உருவாகும் இப்படம் தமிழ் மட்டும் இன்றி மேலும் சில மொழிகளில் கோடையில் வெளியாக உள்ளது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...