அருண் விஜய் நடிப்பில் துருவங்கள் பதினாறு புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் படம் ’மாஃபியா - பாகம் 1’. இப்படத்தை Lyca Productions சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். டீஸர் வெளியீட்டிற்கு பிறகு இந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படமாக மாறியுள்ளது ‘மாஃபியா’. பட வெளியீட்டை முன்னிட்டு இன்று இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
படம் குறித்து பேசிய இயக்குநர் கார்த்திக் நரேன், “’மாஃபியா - பாகம் 1’ என்னோட 3 வது படம். போலீஸ் கதை. சென்னை பின்னணியில் நடக்கிறது. இரு வலிமையான பாத்திரங்கள் இடையே ஒரு கேட் அண்ட் மவுஸ் கேம் நடக்குற மாதிரியான கதை தான் இந்தப்படம். இப்படம் நான் - லீனியர் முறையில நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் நான்கு பாடல்கள் இருக்கிறது. பாடல்கள் ஒவ்வொன்றும் திரைக்கதையோட சம்பந்தபட்டதா தான் இருக்கும். தனியா இருக்காது. அருண் விஜய் போதைப்பொருள் தடுப்பு அதிகாரியா நடிச்சிருக்கார். அவரால் எல்லாவிதமான கேரக்டரும் பண்ண முடியும்னு நான் நினைக்கிறேன். அவருக்கு அந்தளவு திறமை இருக்கிறது. இரண்டு வேறு வேறு குணங்கள் கொண்ட கதாப்பாத்திரங்கள் இடையே நடக்கிற போர் தான் இந்தப்படத்தின் மையக்கதை.
பிரசன்னாவின் கேரக்டர் இந்தப்படத்தில் அடக்கி வாசிக்கிற மாதிரியனது. ஆனா நடிப்பில் கலக்கியிருக்கிறார். பிரியா பாவானி சங்கர் போலீஸ் அதிகாரியா வருகிறார். அவருக்கு முன்னாடி வேற ஹீரோயின்களும் பார்த்தோம். ஆனா இந்தக் கேரக்டருக்கு அவர் தான் பொருத்தமா இருப்பார் என்று மொத்த படக்குழுவும் சொன்னதால் அவங்கள தேர்ந்தெடுத்தோம். அவரும் நல்லாவே நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் நடித்திருக்கிறார். இந்த ரோல் அவருக்கு புது மாதிரியா இருக்கும். இவங்க தவிர படத்தில் நிறைய சின்ன கதாப்பாத்திரங்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு கேரக்டரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பிப்ரவரி 5 இந்தப்படத்தின் முதல் பாடல் வெளியிட இருக்கிறோம். முழுக்க சென்னையில் தான் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம் மூன்று நாட்கள் மட்டும் தாய்லாந்தில் எடுத்திருக்கிறோம். பட வேலைகள் மொத்தமாக முடிந்து விட்டது வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.” என்றார்.
பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயரிக்க எம்...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...