தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் விஜய், அரசியலில் ஈடுபடுவதற்கான நேரம் பார்த்துக் கொண்டிருப்பதாக கூறப்படுவதோடு, தமிழர்களின் ஆதரவு பெற்ற நடிகராகவும் இருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட, விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பேன், காரணம் அவர் தமிழர், ஆனால் ரஜினியை ஆதரிக்க மாட்டேன், என்று கூறியிருந்தார்.
மேலும், ஜல்லிக்கட்டு போராட்டம், நீட் தேர்வால் தற்கொலை செய்துக் கொண்ட அனிதா குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது, என்று விஜய் தமிழக மக்களின் சோகங்களில் அவ்வபோது பங்கெடுத்து வருவதாலும், அவரது திரைப்படங்களில் தொடர்ந்து மத்திய அரசு மற்றும் மாநில அரசு திட்டங்கள் குறித்து விமர்சித்து வருவதாலும், அவர் தற்போது இந்தியா முழுவதும் கவனிக்கும் ஒரு நபராக உருவெடுத்திருக்கிறார்.
இப்படிப்பட்ட விஜய்க்கு தற்போது மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது வருமானவரித்துறை சோதனை. விஜய் மற்றும் அவரை வைத்து படம் தயாரித்தவர், பைனான்ஸ் செய்தவர் என்று அனைவரது இல்லத்திலும், அலுவலகத்திலும் கடந்த இரு தினங்களாக நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.77 கோடி ரொக்கப் பணமும், ரூ.300 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களும் கைப்பற்றிருப்பதாக கூறப்படுகிறது. அதே போல், நடிகர் விஜயிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், படப்பிடிப்பில் இருந்த விஜயை வருமானவரித்துறை அதிகாரிகள் தங்களது வாகனத்தில் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போது, விஜய் வீட்டை முற்றுகையிட்ட மீடியாக்கள், விஜய் வந்ததும், அவரிடம் கேள்வி கேட்க முயன்ற போது விஜய், தனது இரு கைகளாலும் முகத்தை மூடியபடி, கண் கலங்கியவாறு வீட்டுக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் வெளியானதும் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்ததோடு, இது விஜய்க்கு எதிராக நடக்கும் சதி, என்றும் கூறி வருகிறார்கள்.
பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயரிக்க எம்...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...