இறுதி கட்டத்தை எட்டி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், தற்போது கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த டாஸ்க்குகளை செய்து வெற்றி பெற வேண்டும் என்ற தீவிர எண்ணம் சினேகன் மற்றும் சுஜா வாருணி ஆகியோருக்கு அதிகமகா இருந்தாலும், வெற்றி பெற எதுவேனாலும் செய்யலாம், என்ற எண்ணம் சினேகனுக்கு உள்ளதால், சுஜா வாருணிக்கும் அவருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வையாபுரி வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வையாபுரி வீடுக்கு கமல்ஹாசன் சென்று அவரை மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு அழைத்து வருவது போலவும் நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதனால், இனி வரும் பிக் பாஸ் எபிசோட்கள் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்வதோடு, போட்டியாளர்களிடையே ஏற்படும் சண்டைகளுக்கும் பஞ்சமில்லாமல் நகரும் என்று கூறப்படுகிறது.
ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’...
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...