சின்னத்திரை மூலம் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டிருக்கும் வாணி போஜன், தெலுங்கு சினிமாவின் வெற்றி நாயகியாக அறிமுகமாகிவிட்ட நிலையில், தமிழ் சினிமாவில் ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் அறிமுகமாகிறார். அசோக் செல்வன் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில், ரித்திகா சிங் ஹீரோயினாக நடிக்க, வாணி போஜன் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியும் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
இப்படத்தில் வாணி போஜன் நடித்த கதாப்பாத்திரத்தை சில முன்னணி ஹீரோயின்கள் நிராகரித்த நிலையில், வாணி போஜன் தைரியமாக நடிக்க சம்மதம் தெரிவித்ததாக படக்குழுவினர் கூறினார்கள். அப்படி ஒரு வேடத்தில் வாணி போஜன் நடிக்க சம்மதம் தெரிவித்தது ஏன், அது என்ன வேடம் என்பது குறித்து வாணி போஜனிடம் கேட்ட போது, “’ஓ மை கடவுளே’ என்னென்றும் என் இதயத்திற்கு நெருக்கமான படமாக இருக்கும். பெரிய திரையில் என் பயணத்தை தொடங்கிய பிறகு மிகவும் கவனமாக, தேர்ந்தெடுத்த பாத்திரங்களை மட்டுமே செய்து வருகிறேன். தெலுங்கில் ஒரு மிகப்பெரும் ஹிட் அறிமுகத்துக்கு பிறகு தமிழில் ஒரு அற்புதமான வாய்ப்பாக, எனக்கு மிகப்பெரிய ஆசிர்வாதமாக ‘ஓ மை கடவுளே’ படம் அமைந்திருக்கிறது.

காதல் கதைகளுக்கென்றே ஒரு வடிவம் இருக்கும், ஆனால் இயக்குநர் அஷ்வத் அதில் ஃபேண்டஸி தன்மையை புகுத்தி படத்தை மேலும் வெகு அழகாக மாற்றிவிட்டார். மேலும் இப்படம் பேசும் தார்மீக தத்துவ நியாயங்கள், என்னை இப்படம் நோக்கி வெகுவாக ஈர்த்தது. இப்படம் புதிதாக காதலிக்கும் இளைஞர்கள், காதலில் வெகு காலம் பயணம் செய்பவர்கள், காதல் தம்பதியர் என அனைவருக்கும் வாழ்வின் பார்வையை மாற்றித்தரும், பெரு விருந்தாக அமையும். அசோக் செல்வனின் மிகச்சிறந்த, அர்ப்பணிப்பு மிக்க நடிப்பு இப்படத்திற்கு பிறகு வெகுவாக பேசப்படும். இப்படத்திற்கு பிறகு அவர் பெரும் உயரங்களுக்கு செல்வார். ரித்திகா சிங்கின் துடிப்பான நடிப்பு அவரை அனைவர் மனங்களிலும் குடியிருக்க செய்யும். இப்படத்தில் சாரா அற்புதமான பங்கை அளித்துள்ளார். அவரது காமெடி கலந்த குணச்சித்திர நடிப்பு இதுவரையிலான அவரது அடையாளத்தையே மாற்றிவிடும்.” என்று தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் இப்படத்தை அக்ஸஸ் பிலிம் பேக்டரி டில்லிபாபுவும், ஹாப்பி ஹை பிக்சர்ஸ் அபிநயா செல்வமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், தமிழகம் முழுவதும் வெளியிடும் இப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...