ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘செம்பருத்தி’ சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருப்பவர் பாரதா ரெட்டி. இவருக்கு கடந்த 7 ஆம் தேதி திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றது. பிறகு கடந்த 9 ஆம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடைபெற்றது.
திருமணம் குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லாமல், பாரதா ரெட்டி திடீரென்று திருமணம் செய்துக் கொண்டது சீரியல் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிறகு அவர்களுக்காகவே சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், ஊர்வம்பு லக்ஷ்மி, செம்பருத்தி சீரியல் நடிகர், நடிகைகள், போஸ் வெங்கட், சோனியா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.
மிக மகிழ்ச்சியாக இருக்கும் பாராத ரெட்டி, இன்னும் இரண்டு நாட்களில் காதலர் தினம் வரப்போகிறது. கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று காதலர்களாக இருந்த நாங்கள், இந்த ஆண்டு தம்பதியாக மாறுவோம், என்று நினைக்கவே இல்லை. இது ரொம்பவே மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியிருக்கிறார்.

மேலும், திருமணத்தை விட மகிழ்ச்சியான விஷயமாக அவர் கூறியிருப்பது, இருவருடைய பெயர் தானாம். ஆம், பாரத் - பாரதா என்ற இந்த பெயர் ஒற்றுமை தான் அவருக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கிறதாம். அதே சமயம், அவரது நண்பர்கள் இருவரில் ஒருவர், பெயரை மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறார்கள், என்று கூறுகிறார்களாம்.
அப்படி எல்லாம் எதுவும் இல்லை, அவரது பெயரை கேட்ட உடனே, எனக்கே அது ஆச்சர்யத்தை கொடுத்தது, என்று பாரதா தனது நண்பர்களிடம் விளக்கம் அளித்தும் கூட, சில அதை நம்ப மறுக்கிறார்களாம்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...