தொடர்ந்து படங்கள் நடித்தாலும் சரி, படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தாலும் சரி, சிம்பு பற்றி எப்போதுமே பரபரப்பான செய்திகள் வந்துக் கொண்டு தான் இருக்கிறது. குழந்தையில் இருந்து நடித்து வரும் சிம்புவை பற்றி அவ்வபோது சர்ச்சைகள் எழுந்துக் கொண்டிருந்தாலும், அவர் எதையும் கண்டுக்கொள்வதில்லை. அதேபோல், சில ஆண்டுகள் படங்கள் இல்லாமல் இருப்பவர், சில ஆண்டுகள் நல்ல பிள்ளையாக நடிப்பார். பிறகு எப்போதும் போல், எதாவது வம்பில் சிக்கிக் கொள்வார்.
சிம்புவின் சினிமா வாழ்க்கையில் மட்டும் இப்படி இல்லை, அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. அதிலும், அவரது காதல் கதைகள் மூலம் எழும் சர்ச்சைகளுக்கு அளவே இல்லை.
அந்த வகையில், தனது முன்னாள் காதலியான நயன்தாராவுடன் சிம்பு மீண்டும் பழக தொடங்கியுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நயன்தாராவை சந்தித்து, தனது வாழ்க்கை குறித்து பேசிய சிம்பு, அவரிடம் கண்ணீர் விட்டு அழுததாக கூறப்படுகிறது. மேலும், மற்றொரு முன்னாள் காதலியான ஹன்சிகாவுடன் சிம்பு, ராசியாகிவிட்டாராம்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நயன்தாரா குறித்து பேசிய சிம்புவிடம், “நயன்தாரா உங்களிடம் மீண்டும் காதலை வெளிப்படுத்தினால் என்ன செய்வீர்கள்? என்று கேள்வி கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளித்த சிம்பு, ”நாங்கள் இப்போது நண்பர்கள் மட்டுமே வேறு எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். அதே சமயம், நயன்தாராவுடன் தான் நட்பாக மீண்டும் பழக தொடங்கியிருப்பதை மறைமுகமாக சிம்பு கூறியிருக்கிறார்.
அப்படியானால், மீண்டும் காதலில் விழ சிம்பு ரெடியாகவிட்டார். ஆனால், அது நயனா அல்லது ஹன்சிகாவா என்று பொருத்திருந்து பார்ப்போம்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...