விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்த ‘ஓ மை கடவுளே’ இன்று வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், அவரது புதுப்படத்தின் அறிவிப்பும் இன்று வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா என்று இரண்டு ஹீரோயின்கள் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார்கள்.
’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை செவன் ஸ்க்ரீன் சார்பில் லலித் குமார் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் டைடில் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த ‘நானும் ரவுடி தான்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மீண்டும் அதே கூட்டணி இணைந்திருப்பதன் மூலம் இப்படத்தின் மீது இப்போதே எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...