தமிழ் சினிமாவின் மினிமம் கியாரண்டி இயக்குநர்களில் ஒருவரான சுந்தர்.சி கடைசியாக இயக்கிய ‘ஆக்ஷன்’ படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியதோடு, தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்ட்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது சுந்தர்.சி தயாரிப்பில், ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்து வெளியாகியிருக்கும் ‘நான் சிரித்தால்’ படமும் மிகப்பெரிய தோல்வியடையும் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.
இப்படி, இயக்கம் மற்றும் தயாரிப்பு என இரண்டிலும் தொடர்ந்து தோல்வியடைந்திருக்கும் சுந்தர்.சி, இரண்டிலும் ஒரே நேரத்தில் வெற்றி பெறுவதற்காக, தனது ஹாரர் சீரிஸான ‘அரண்மனை 3’யை உடனே தொடங்க இருக்கிறார். இதில் ஹீரோவாக ஆர்யா நடிக்க ஹீரோயின்களாக ராஷி கண்ணா மற்றும் ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘அரண்மனை 3’ யில் மூன்றாவது ஹீரோயினாக தமிழ் பிக் பாஸ் சீசன் 3-யில் போட்டியாளாராக கலந்துக் கொண்ட சாக்ஷி அகர்வால் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏகப்பட்ட சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்த சாக்ஷி அகர்வாலுக்கு ஏமாற்றமே கிடைத்தது. அம்மணிக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்காததால், தனது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். தற்போது அந்த புகைப்படங்களுக்கான பலனாக தான் சுந்தர்.சி-யின் ‘அரண்மனை 3’யில் வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம்.
2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது...
’பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன்...
VCare நிறுவனத்தின் அதிநவீன Centre of Excellence (COE) மையத்தை நடிகை பிரியா ஆனந்த், VCare குழுமத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திருமதி E...