பவர் ஸ்டார் என்றதும் நம் நினைவுக்கு பட்டென்று வருபவர் காமெடி நடிகர் சீனிவாசன் தான். இவர் தன்னை டாக்டர் என்றும் சொல்லிக் கொள்வதுண்டு. ஆனால், எந்த டாக்டர் என்று மட்டும் சொல்ல மாட்டார். இவர் ஹீரோவாக நடித்த படம் 300 நாட்கள் ஓடியது என்று இவரே பல மேடைகளில் சொல்வதோடு, தனக்கு 5 கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள், என்று கூச்சப்படாமல் சொல்வார். இவர் மீது பல மோசடி புகார்கள் எழுந்த நிலையில், சில காலம் டெல்லி திஹார் சிறையில் தண்டனை அனுபவித்துவிட்டு வந்தவர், தன்னையும் ஒரு காமெடி நடிகர் என்று கூறிக்கொண்டு கோலிவுட்டில் வலம் வருகிறார்.

இவரது பெயருக்கு முன்பு இருக்கும் பவர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பவன் கல்யாண் தான். இவரை தான் தெலுங்கு ரசிகர்கள் பவர் ஸ்டார் என்று அழைப்பார்கள். ஆனால், சீனிவாசன் அந்த பட்டப் பெயரை பயன்படுத்த தொடங்கியதில் இருந்து, பவர் ஸ்டார் என்றாலே தற்போது சீனிவாசன் தான் அனைவரது நினைவுக்கும் வருகிறார். ஏன், கூகுளில் பவர் ஸ்டார் என்று தேடினாலே, சீனிவாசன் தான் வருவார்.
இந்த நிலையில், தெலுங்கு நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாண், தனது முன்னாள் மனைவியும், நடிகையுமான ரேணு தேசாய்க்கு 5 கோடி ரூபாயில் வீடி ஒன்று வாங்கிக் கொடுத்திருப்பதாக, தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியாக, அதை, பவர் ஸ்டார் சீனிவாசன் வாங்கிக் கொடுத்ததாக, சில தமிழ் ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க, பவன் கல்யாண் 5 கோடியில் வீடு வாங்கிக் கொடுத்திருப்பதாக வெளியான செய்தியை அறிந்து ரேணு தேசாய், கோபமடைந்திருப்பதோடு, இதுவரை தனது முன்னாள் கணவர் மூலம் தனக்கு எந்தவிதமான ஜீவனாம்சமும் கிடைக்கவில்லை. தற்போது தான் இருக்கும் வீடு, தனது சொந்த சம்பாத்தியத்தில் வாங்கியது, என்று விளக்கமும் அளித்திருக்கிறார்.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...