நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை வனிதா, விஜயின் ‘சந்திரலேகா’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் நடித்தாலும், ஒரு சில படங்களுக்குப் பிறகு அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இதனால், இல்லற வாழ்க்கையில் நுழைந்தவர் அதிலும் தோல்வியை தான் சந்தித்தார். தனது இரண்டு கணவர்களையும் பிரிந்து, குழந்தைகளுடன் தனியாக வாழும் வனிதா, பிக் பாஸ் மூலம் தற்போது கோலிவுட்டின் டிரெண்டிங் பிரபலமாகியுள்ளார்.
பிக் பாஸ் போட்டியில் கலந்துக் கொண்டவர்களுக்கு இடையே பிரச்சினை, என்றால் அது குறித்து வனிதாவிடம் கருத்து கேட்டு பலர் பேட்டி எடுக்கிறார்கள். அவரும் எந்தவித தயக்கமும் இன்றி பேட்டி கொடுப்பதோடு, ரசிகர்கள் பீதியடையும் விதத்தில் பல திடுக்கிடும் தகவல்களை கூறி வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது முதல் காதல் குறித்து பேசியிருக்கும் வனிதா, தன்னை 4-ம் வகுப்பு படிக்கும் மாணவர் துரத்தி துரத்தி காதலித்தது தான் முதல் காதல், என்று கூறியிருக்கிறார். அதுமட்டும் அல்ல, அந்த பையன் தற்போது சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருக்கிறாராம். அவரை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த போது, வனிதா அவருடன் நட்பாக பழகினாலும், அவரது துரத்தல் காதல், தான் அவருக்கு நினைவுக்கு வந்ததாம். அது தான் தனது முதல் காதலாக இப்போதும், தான் நினைப்பதாக கூறிய வனிதா, அந்த நடிகரை என்றென்றும் 16 என்று அழைக்கலாம், என்றும் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், அந்த நடிகர் யார்? என்பதை தான் சொல்ல விரும்பவில்லை, என்று வனிதா கூறியிருக்கிறார். வனிதா சொல்லவில்லை என்றாலும், நாங்கள் கண்டுபிடிப்போம், என்று நெட்டிசன்கள் வரிந்துக்கட்டிக் கொண்டு வர, இப்போது இந்த பிரச்சினை நடிகர்கள் விஜய் மற்றும் சிம்பு பெயர்கள் அடிபட தொடங்கியிருக்கிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...