இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குந்ராக பணியாற்றிய நரசிம்ம ராவ், இயக்கும் முதல் படமான ‘யாகம்’ ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்பட்த்தின் தெலுங்கு பதிப்பிற்கு ‘சரபா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஏ.கே.எஸ் எண்டர்டெயின்மெண்ட் அண்ட் மீடியா நிறுவனம் சார்பில் அஸ்வனி குமார் சகதேவ், சுரேஷ் கபாடியா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் புதுமுகம் ஆகாஷ் ஷேதேவ் ஹீரோவாகவும், மிஸ்தி என்ற புதுமுகம் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் நெப்போலியன், ஜெயபிரதா, நாசர், பொன்வண்ணன் அகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
’கைதி நம்பர் 150’, ’கெளதமி புத்ரா சாதகர்னி’ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதிய சாய் மாதவ் புரா இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். கோட்டி இசையமைக்கும் இப்படத்திற்கு ரமண சால்வா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தீய சக்திக்கும் நல்ல சக்திக்கும் இடையே நடக்கும் போட்டி தான் இப்படத்தின் கதை. பேண்டஷி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறதாம்.
நேற்று நடைபெற்ற இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நாசர், நெப்போலியன், ஜெயபிரதா, ஹீரோ ஆகாஷ், ஹீரோயின் மிஸ்தி, இசையமைப்பாளர் கோட்டி உள்ளிட்ட படக்குழுவினருடன், இயக்குநர்கள் ஆடம் தாஸ், அறிவழகன், ஹாஸ்மின், பாலசேகர் ஆகியோரும் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் நாசர், “இந்த படத்தில் எனக்கு ரொம்ப வித்தியாசமான கதாபாத்திரம் என்று சொன்னால் அது அனைவரும் சொல்வது போல தான் இருக்கும். ஆனால், அது தான் உண்மை. அப்படி சொல்லவில்லை என்றாலும், இதுவரை நான் நடிக்க முடியாத ஒரு கதாபாத்திரத்தை இந்த படத்தில் எனக்கு நரசிம்ம ராவ் கொடுத்திருக்கிறார். ஹீரோவுடனே வரும் ஒரு காமெடி வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். நடித்த் முடித்து டப்பிங் பேசிய பிறகும் இது சரியாக வருமா? என்ற சந்தேகம் எனக்கு இருந்துக்கொண்டே தான் இருந்தது. படம் வெளியானால் தான் தெரியும், இந்த கதாபாத்திரத்தில் என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா, என்பது.” என்றார்.
நடிகர் நெப்போலியன் பேசும் போது, “இந்த படத்தில் நான் நடிக்க சம்மதித்ததற்கு மூன்று காரணங்கள் உண்டு. ஒன்று நரசிம்ம ராவ் இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் என்பது முதல் காரணம். நான் ஷங்கர் சார் படங்களில் நடிக்க ரொம்ப ஆசைப்பட்டிருக்கிறேன். அவரை பார்க்கும் போது அவரிடமே வாய்ப்பும் கேட்பேன். ஆனால், அவர் நிச்சயம் கூப்பிடுகிறேன், என்று கூறுவார், இதுவரை கூப்பிடவில்லை. சரி அவரது உதவியாளராவது கூப்பிட்டாரே என்று தான் சம்மதித்தேன்.
இரண்டாவது காரணம், ஜெயபிரதா மேடம். அவர் எனக்கு ஜோடியாக நடிக்கிறார் என்றதும் நான் சம்மதித்துவிட்டேன். ஒரு காலத்தில் அவரை நாம் எந்த அளவுக்கு ரசித்திருக்கிறோம், அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று ஆசைப்பட்டது உண்டு. பாராளுமன்றத்தில் ஜெயபிரதா, ஹேமாமாலி இருவரும் வரும்போது எம்.பி-க்கள் அனைவரும் அவர்களையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். அப்போது நான் நினைத்தது உண்டு, இவங்க கூட நடிக்க முடியாம போச்சே என்று. ஆனால், இப்போது அந்த வாய்ப்பு கிடைத்தது அதை விட நான் விரும்பவில்லை.
மூன்றாவது காரணம், இயக்குநர் நரசிம்மா. ஷங்கரின் உதவியாளர் என்பதை அவர் படத்தின் பூஜையிலேயே நிரூபித்துவிட்டார். இப்படத்தின் பூஜை ஆந்திரா முழுவதும் நடைபெற்றது. நான் அமெரிக்காவில் இருப்பதால் பூஜைக்கு என்னால் வர முடியாது என்றேன், பரவாயில்லை நீங்கள் அமெரிக்காவில் இருந்தபடியே ஒரு பூஜையை போட்டுவிடுங்கள் என்றார். அப்படியே நானும் இரவு 11 மணிக்கு இந்த படத்திற்காக பூஜை போட்டேன். இப்படி படத்தின் பூஜையை வித்தியாசமாக செய்தவர், படத்தையும் அப்படியே வித்தியாசமாகவும், பிரமிப்பாகவும், பிரம்மாண்டமாகவும் இயக்கியிருக்கிறார். என்னிடம் எத்தனை நாட்கள் தேதி வாங்கினாரோ, அத்தனை நாட்களில் படப்பிடிப்பை முடித்து என்னை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார். நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் அறிவழகன், ஆடம் தாஸ், ஹாஸ்மின், பாலசேகர் ஆகியோர் கலந்துக்கொண்டு இயக்குநர் நரசிம்ம ராவ் குறித்து வாழ்த்தி பேசினார்கள்.
பிரபல நிறுவனமான Behindwoods Productions தயாரிக்கும் ‘மூன்வாக்’ (Moonwalk) திரைப்படத்தின் 14 கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது...
யாஷ் நடிக்கும் மிகப்பிரம்மாண்ட படைப்பான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு அதன் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது...
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், அவரது உறவினருமான மதிமாறன் புகழேந்தி ’செல்ஃபி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்...