நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் அமைப்பு தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. விஜயின் பிறந்தநாள் அன்று மட்டும் அல்லாமல், அவ்வபோது மக்களிடம் குறைகளை கேட்டு மற்றும் அவர்களின் நிலை அறிந்து மாவட்டம் ரீதியாக விஜய் மக்கள் இயக்கத்தினர் நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், நெல்லித்தோப்பு விஷ்ணுகுமார், உருளயன்பேட்டை நரேஷ், தீபக், உழவர்கரை முகுந்தன், உப்பளம் சிவா ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் புதுச்சேரியில் விஜய் மக்கள் இயக்கத்தின் 5 புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கிளைகள் திறப்பு விழாவையொட்டி, ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அரிசி 5 கிலோ வீதம் 200 குடும்பங்களுக்கு,
400 புடவை, 100 வேட்டி,
1400 பேருக்கு மதிய உணவு,
150 குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக்,
750 குழந்தைகளுக்கு நோட்டுபுத்தகம், பென்சில், பேனா, ரப்பர், 100 கைலி, துண்டு, ஆகியவை அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி.N.ஆனந்து EX,MLA., வழங்கினார்.
நிகழ்ச்சியில் புதுவை மாநில செயலாளர் சரவணன், மோரிஸ் தொகுதி தலைவர் உழவர்கரை ராஜசேகர், இளைஞரணி தலைவர்கள் நெல்லித்தோப்பு செந்தில், உப்பளம் பேட்டரிக், கதிர்காமம் அருள்பாண்டி, வில்லியனூர் சுகுமார், தொகுதி நிர்வாகிகள் புதியவன், நிரேஷ், செந்தில், நாகராஜ், ஜோசப், அற்புதராஜ், தாஸ், அருள் ஜான், பரத், மணிவண்ணன், வேலு, பாலா, தினேஷ், கோவிந்தன், பிரபு, செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் விஜயின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கு பின்னணியில் அரசியல் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஒரே நாளில் விஜயின் மக்கள் இயக்கத்தின் 5 புதிய கிளைகள் திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...