Latest News :

வரலக்‌ஷ்மியை ஓரம் கட்டிய தயாரிப்பாளர்!
Tuesday February-18 2020

’போடா போடி’ மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான வரலக்‌ஷ்மி, வில்லி, குணச்சித்திரம் என்று பல்வேறு வேடங்களில் நடித்து வருவதோடு, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழி திரைப்படங்கள் அனைத்திலும் நடித்து வருகிறார்.

 

விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு வில்லியாக நடித்து பாராட்டு பெற்ற வரலக்‌ஷ்மி, நடிப்பில் கடந்த ஆண்டு ‘நீயா 2’ வெளியானது. அப்படத்தை தொடர்ந்து ’கன்னி ராசி’, ‘வெல்வெட் நகரம்’, ‘காட்டேரி’, ‘டேனி’ உள்ளிட்ட அரை டசன் படங்களுக்கு மேல் வரலக்‌ஷ்மி நடித்து வருகிறார். இதில் சுமார் நான்கு படங்கள் படப்பிடிப்பு முடிந்து, பின்னணி வேலைகளும் முடிந்த நிலையில், ரிலீஸ் ஆவதில் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது.

 

பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிப்பில் வரலக்‌ஷ்மி ‘டேனி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஹீரோயின் ஆக்‌ஷன் சப்ஜக்கட்டான இப்படத்தில் வரலக்‌ஷ்மி போலீஸாக நடிக்க, அவருக்கு இணையான வேடத்தில் ‘களவாணி 2’ வில்லன் துரை சுதாகர் நடித்திருக்கிறார். இவர்களுடன் நாய் ஒன்றும் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இப்படம் முடிவடைந்த நிலையில், இன்னும் வெளியாகமல் இருக்கிறது. சில சமயம் ரிலீஸ் தேதி அறிவித்தும், படம் வெளியாகமல் போய்விட்டது.

 

இந்த நிலையில், பி.ஜி.முத்தையா தயாரிக்கும் மற்றொரு படமான ‘காக்டெய்ல்’ என்ற படம் மார்ச் மாதத்தில் ரிலீஸ் செய்யப்படுவதாக முத்தையா நேற்று அறிவித்துள்ளார். இதில், யோகி பாபு ஹீரோவாக நடித்திருக்கிறார். யோகி பாபு ஹீரோவாக நடித்த படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதால், அவர் நடித்த காக்டெய்ல் படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பி.ஜி.முத்தையா, வரலக்‌ஷ்மி நடித்திருக்கும் ‘டேனி’ படத்தை ஓரம் கட்டியுள்ளார்.

 

இரண்டுமே அவர் தயாரித்த படங்கள் தான் என்றாலும், இரண்டில் யோகி பாபு நடித்த ‘காக்டெய்ல்’ படம் தான் அவரை காப்பாற்றும், என்று அவர் முடிவு செய்து, வரலக்‌ஷ்மி நடித்த டேனி படத்தை பிறகு பார்க்கலாம், என்று ஓரம் கட்டிவிட்டதாக முத்தையா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

Related News

6222

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery