பிரபல தொலைக்காட்சியில் வானிலை அறிக்கை சொல்லியே பிரபலமானவர் மோனிகா. அதன் பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளர், சீரியல் நடிகை என்று உயர்ந்துக் கொண்டே சென்றவர் திடீரென்று, சோசியல் மீடியாக்களில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்தும் அரசியல் நிலவரம் குறித்தும் பேச தொடங்கினார்.
மோனிகாவின் அரசியல் வீடியோக்கள் வைரலான நிலையில், அவரது ஒவ்வொரு வீடியோவும் லட்சக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று அவர் டிவி-யில் இருந்து விலகியதோடு, வீடியோ வெளியிடுவதையும் குறைத்துக் கொண்டார்.
இந்த நிலையில், சமீபத்தில் பிரபல வாரத இதழின் இணையதளத்திற்கு மோனிகா அளித்திருக்கும் பேட்டியில், ”எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இல்லை, எனவே பாரபட்சம் பார்க்காமல் அரசியல் பற்றி பேசி வந்தேன். ஆனால், நான் பேசிய ஒரு அரசியல் வீடியோ தொடர்பாக எனக்கு எதிர்ப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து நான் பணிபுரிந்த டிவி-யில் இருந்து விலகினேன். பிறகு தொடர்ந்து சோசியல் மீடியாக்களில அரசியல் நிகழ்வுகள் பற்றி பேசி வீடியோ வெளியிட்டேன்.
அப்போது எனக்கு பலர் மிரட்டல் விடுத்தார்கள். ஒரு முறை எனது பிள்ளை படிக்கும் பள்ளியை தெரிந்துக் கொண்டு, அங்கே சென்று என் பிள்ளையை புகைப்படம் எடுத்து, எனக்கு அனுப்பி வைதார்கள். அதாவது, எனது பிள்ளையை வைத்து எனக்கு மிரட்டல் விடுத்தார்கள். அந்த நேரத்தில் எனது கணவர் பணி நிமித்தமாக வெளிநாட்டில் இருந்ததால், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் எனக்கு கூறிய அறிவுரையை ஏற்று, வீடியொ போடுவதை குறைத்துக் கொண்டேன்.
இருந்தாலும், அவர்களது மிரட்டலுக்கு நான் பயப்படவில்லை, எனது குடும்ப பணி காரணமாக எனது வேலையை குறைத்துக் கொண்டேன், விரைவில் எனது கணவருடன் பங்களிப்போடு, அரசியல் பணியில் இறங்கப் போகிறேன், பொருத்திருந்து பாருங்கள்.” என்று தைரியமாக பேசியிருக்கிறார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...