‘களவாணி 2’ மூலம் வில்லனாக அறிமுகமான நடிகர் துரை சுதாகர், பப்ளிக் ஸ்டாராக தஞ்சாவூர் மாவட்ட மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர். திரைப்படத்தில் வில்லனாக நடித்தாலும், டெல்டா மாவட்டத்தின் ஹீரோவாக வலம் இவர், சினிமாவில் நடிப்பதோடு மட்டும் அல்லாமல், சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதோடு, இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அந்நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற தன்ஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவில் நடிகர் துரை சுதாகர் மற்றும் அவரது ரசிகர் மன்றத்தினரின் பணியை பலர் பாராட்டியதோடு, அது தொடர்பான செய்திகள் பல்வேறு ஊடகங்களில் வெளியானது. இதை தொடர்ந்து மரம் வளர்ப்பது குறித்தும், இயற்கையை காப்பது குறித்தும் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, காதலர் தினத்தன்று திரைப்படம் பார்க்க வந்த இளைஞர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
இந்த நிலையில், சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற பாரம்பரியம் மிக்க திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் நடிகர் துரை சுதாகர், கலந்துக் கொண்டு, மாடுபிடி வீரர்களை ஊக்கப்படுத்தியதோடு, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி கெளரவித்தார்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் நடிகர் துரை சுதாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றதோடு, தனது நிலா புரமோட்டர்ஸ் நிறுவனம் மூலம், மாடுபிடி வீரர்களுக்கான, ஜெஸ்ஸி உள்ளிட்ட உடைகள் மற்றும் பரிசு பொருட்களையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘களவாணி 2’ படத்திற்குப் பிறகு, பிற துறைகள் தொடர்பாகவே உங்கள் பெயர் அடிபடுகிறதே, எப்போது மீண்டும் நடிகராக உங்களைப் பற்றி செய்தி வரப்போகிறது?, என்று அவரிடம் கேட்டதற்கு, முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன், விரைவில் நடிகராக உங்களை சந்திப்பேன், என்று கூறுகிறார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...