ஆதி ஹீரோவாக நடித்திருக்கும் மூன்றாவது படமான ‘நான் சிரித்தால்’ கடந்த 14 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அவரது முந்தைய இரண்டு படங்களை தயாரித்த இயக்குநர் சுந்தர்.சி தான், தனத அவ்னி மூவிஸ் மூலம் இப்படத்தையும் தயாரித்திருக்கிறார். இப்படம் ஆதிக்கும், தயாரிப்பாளராக சுந்தர்.சி-க்கும் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்திருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இப்படத்தை வெளியிட்டிருக்கும் ராக்போர்ட் முருகானந்தம், ஆதியின் முந்தைய இரண்டு படங்களையும் ரிலீஸ் செய்ததோடு, ‘நான் சிரித்தா’ படத்தை சுமார் 700 திரையரங்கங்களில் வெளியிட்டிருக்கிறாராம். அதேபோல், ஆதியின் அடுத்த படத்தை அவரே சுமார் 1000 தியேட்டர்களுக்கு மேல் வெளியிடப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்த வெற்றியை கொண்டாடும் விதமான ‘நான் சிரித்தால்’ படக்குழுவினர் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். ‘அரண்மனை 3’ படப்பிடிப்பில் சுந்தர்.சி இருப்பதால், அவருக்கு பதிலாக அவரது மனைவி நடிகை குஷ்பு கலந்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய குஷ்பு, ”இதுபோன்ற சினிமா மேடையில் பேசி பல வருடங்கள் ஆகிறது. ‘அவ்னி மூவிஸ்’ என்பது எனக்கும் சுந்தர்.சி-க்கும் கனவு. ஏனென்றால், எங்கள் இருவருக்கும் தெரிந்தது சினிமா மட்டும்தான். அவ்னி மூவிஸ்-ன் வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் எனது கணவர் சுந்தர்.சி மட்டும்தான். நாங்கள் இருவரும் சினிமாவை நேசிக்கிறோம். எங்கள் படங்கள் மட்டுமல்லாமல் அனைவரின் படங்களும் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்போம். ஆதி எங்கள் குடும்பத்திற்குள் வந்தது எனது சிறிய மகளால் தான். அவள் தான் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியை அறிமுகப்படுத்தினாள். எனக்கு சக்களத்தி ஆதி தான். எனது கணவரும், ஆதியும் பேச ஆரம்பித்தால் நேரம் காலம் பார்க்காமல், இரவு 2 மணி ஆனாலும் பேசிக் கொண்டேயிருப்பார்கள்.
கே.எஸ்.ரவிக்குமாருடன் நீண்ட நாள் நட்பு இருக்கிறது. இப்படத்தின் வெற்றி ஒவ்வொருவரும் அடுத்தவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கை வீண் போகாமல் அனைவரும் காப்பாற்றுகிறார்கள். இன்றைய காலத்தில் நகைச்சுவையில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருப்பவர் யோகிபாபு. ஆனால், நாங்கள் அழைத்ததும் உடனே ஒப்புக் கொண்டார்.
எங்களுக்கு கருத்து, கஷ்டங்கள் ஆகியவற்றை சொல்லும் படம் எடுப்பதைவிட அனைவரையும் மகிழ்விக்கும் படமாக எடுக்க வேண்டும் என்ற உறுதியோடு இருக்கிறோம். அதன் பலனாக, விநியோகஸ்தர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்கில் பூ வாசனை வருகிறது என்று கூறுகிறார்கள். குடும்பத்துடன் திரையரங்கிற்கு வருவது அதிகரித்திருப்பதில் மகிழ்ச்சி. என்னுடைய வெற்றிக்கு எனது பின்னால் பக்கபலமாக இருப்பது எனது கணவர் சுந்தர்.சி. தான்.” என்றார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி பேசுகையில், “இப்படத்தின் வெற்றி அன்பால் மட்டுமே கிடைத்திருக்கிறது. அன்று முதல் இன்று வரை எனது ரசிகர்கள் ஆதரவளித்து வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் எனக்கு சரி எது? தவறு எது? என்று சுட்டிக் காட்டி ஊக்குவிக்கும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி.
இயக்குநர் சுந்தர்.சி-யுடனான உறவு எப்படி வளர்ந்தது என்று தெரியவில்லை. அவர் என்மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.
நான் பள்ளியில் படிக்கும்போது 'ராப்' பாடல் தான் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால், இப்போது எனது ‘ஹிப் ஹாப்’ பாடலையும் ரசிக்கிறார்கள். என்னைப் போலவே சுதந்திரமான கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களை எங்களது ஒவ்வொரு படங்களிலும் அறிமுகப்படுத்தி வாய்ப்பு வழங்கி வருகிறோம். அப்படிதான் யூடியூப்-ல் ராணாவைப் பார்த்து அழைத்து வந்தோம். அவர் மட்டுமல்லாமல் அவருடைய நண்பர்களையும் அழைத்து வந்தோம். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இயக்குநராகும் திறமையுள்ளது.
கே.எஸ்.ரவிக்குமார் திட்டுவதாக இருந்தாலும், பாராட்டுவதாக இருந்தாலும் மனதில் இருப்பதைக் கூறிவிடுவார். இப்படத்தில் தூணாக இருந்தார். படத்தில் இரண்டாவது பாதியை வெற்றிபெற செய்தது கே.எஸ்.ரவிக்குமார், ரவிமரியா, ராணா ஆகியோர் தான். நாயகன், நாயகி போல எனக்கும், என் அப்பாவாக நடித்த ‘படவா’ கோபிக்கு கெமிஸ்ரி பேசும்படியாக வந்திருக்கிறது.
ராஜ்மோகனின் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறார். கதிர் கடின உழைப்பாளி. அவருடைய திறமைக்கு விரைவிலேயே மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார். மேலும், இப்படத்திற்காக பணியாற்றிய ஒவ்வொரு கலைஞர்களுக்கும் நன்றி.
எனக்கு பல கனவுகள் இருக்கிறது. அதை ஒவ்வொன்றாக நனவாக்கி வருகிறேன். என்னுடன் பணியாற்றும் அனைவரின் கனவும் நனவானதில் மகிழ்ச்சி” என்றார்.
இயக்குநர் ராணா பேசுகையில், “ஆதி, சுந்தர்.சி. மற்றும் குஷ்பூ மூவரும் என் மீது வைத்த நம்பிக்கையால் தான் இப்படம் உருவானது.
கே.எஸ்.ரவிக்குமாரை வைத்து படம் இயக்குவது கணித ஆசிரியை அருகில் வைத்து தேர்வு எழுதுவது போல இருந்தது. முதல் படம் இயக்குகிறாய், கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்று என்னை கே.எஸ்.ரவிக்குமார் ஊக்குவித்தார். எனது நண்பர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி” என்றார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...