‘சூது கவ்வும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி. கலைஞர் டிவி-யின் நாளை இயக்குநர் போட்டியில் வெற்றி பெற்ற நலன் குமாரசாமி, தனது முதல் படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக்கியதோடு, ’காதலும் கடந்து போகும்’ என்ற தனது இரண்டாவது படத்தின் மூலம் தரமான படங்களை இயக்கும் இயக்குநர் என்று நிரூபித்தார்.
தனது மூன்றாவது படத்தை இயக்கும் பணியில் மும்முரமாக உள்ள நலன் குமாரசாமிக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கொத்தமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற இந்த விழாவில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துக் கொண்டனர்.
36 வயதகும் நலன் குமாரசாமி, தனது உறவினர் சரண்யாவை திருமணம் செய்துக் கொள்கிறார். நலன் குமாரசாமி - சரண்யா திருமணம் நவம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.
பிரபல நிறுவனமான Behindwoods Productions தயாரிக்கும் ‘மூன்வாக்’ (Moonwalk) திரைப்படத்தின் 14 கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது...
யாஷ் நடிக்கும் மிகப்பிரம்மாண்ட படைப்பான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு அதன் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது...
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், அவரது உறவினருமான மதிமாறன் புகழேந்தி ’செல்ஃபி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்...