Latest News :

இரண்டரை மணி நேர அந்தரங்க வாழ்க்கை! - சனம் ஷெட்டியின் பதிவால் கடுப்பான தர்ஷன்
Thursday February-20 2020

பிக் பாஸ் மூலம் பிரபலமான இலங்கை தமிழர் தர்ஷனை, காதலித்து வந்த நடிகை சனம் ஷெட்டி, தர்ஷனுக்கும் தனக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அவர் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக, போலீஸில் புகார் அளித்தார். மேலும், தர்ஷனுக்காக தான் ரூ.15 லட்சம் செலவு செய்திருப்பதாகவும், அவர் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்க தான் பல்வேறு உதவிகள் செய்ததாகவும், அவர் கூறினார்.

 

சனம் ஷெட்டியின் புகாரை மறுத்த தர்ஷன், நிச்சயதார்த்தம் நடைபெற்றது உண்மை தான், ஆனால் சனம் ஷெட்டி தனது முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதோடு, தன்னை அடிமையைப் போல நடத்துவதாக, கூறியதோடு, நிச்சயதார்த்தத்திற்கு பிறகு அவர் முன்னாள் காதலருடன் இரவு நேர பார்ட்டிகளில் பங்கேற்றார், என்றும் கூறினார்.

 

இதன் பிறகு இருவர் பிரச்சினையும் தீர்ந்த நிலையில், சனம் ஷெட்டி பேட்டி ஒன்றில், தானும், தர்ஷனும் இரண்டரை மணி நேரம் கணவன், மனைவியாக அந்தரங்க வாழ்க்கை வாழ்ந்ததாக கூறினார். இதனை கேட்டு கடுப்பான தர்ஷன், தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில், நேசிப்பவர்கள் பிரிவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அது இருவர் பிரச்சினை மட்டுமே. இருவரின் தனிப்பட்ட பிரச்சினையை பலர் அறியும்படி சொல்வது சரியானதாக இருக்காது. நான் அழிய வேண்டும் என்று சிலர் நினைத்தார்கள், அது நடக்காது, அது நடக்கவும் விட மாட்டேன், முன்பை விட, எனது வாழ்க்கையின் மீது அதிகம் கவனம் வைத்து வாழ தொடங்கியுள்ளேன், என்று தெரிவித்துள்ளார்.

Related News

6231

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery