கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், உதவி இயக்குநர், உதவி கலை இயக்குநர் மற்றும் உதவி புரொடக்ஷன் பணியாளர் ஆகியோர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன், தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் மறுத்துவமனையில் உள்ள மூன்று பேரது சடலத்திற்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
பிறகு ஊடகங்களிடம் பேசிய கமல்ஹாசன், ”இந்தியன்-2 படப்பிடிப்பில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி வழங்குகிறேன். கிரேன் விபத்தில் இருந்து நான் நூலிழையில் உயிர்தப்பினேன். உயிரிழந்தவர்களுக்கு இந்த இழப்பீடு போதாது, என் குடும்பத்தில் நிகழ்ந்த இழப்பாகவே இதை கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...