’உதயம் என்.எச் 4’, ‘பொறியாளன்’, ‘புகழ்’ ஆகிய படங்களை இயக்கிய மணிமாறன், இயக்கியிருக்கும் படம் ’சங்கத்தலைவன்’. சமுத்திரக்கனி ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில், ஹீரோயினாக விஜே ரம்யா நடித்திருக்கிறார். இவர்களுடன் கருணாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். உதயகுமார் தயாரித்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், சுப்ரமணியம் சிவா, GV பிரகாஷ் பவான் ஆகியோர் சிறப்பு விழுந்தினர்களாக கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய எம்.எல்.ஏ-வும், நடிகருமான கருணாஸ், “நான்கு வருடம் ஆகுது. சினிமா நிகழ்வில் பேசி. நேற்று இரவு இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். வெற்றிமாறன், மணிமாறன் இருவரும் அந்தக் காலத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். கதை டிஸ்கசன் போது இருவரும் அடித்துக் கொள்வார்கள். அந்தளவிற்கு ஆக்கப்பூர்வமான கதை விவாதம் செய்வார்கள். நான் பார்க்கும் உண்மையான மிகச்சில மனிதர்களில் வெற்றிமாறன் ஒருவன். சட்டமன்றத்தில் நிறையபேர் நல்ல நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மை விட நல்லா நடிக்கிறார்கள். அதனால் நாம் சினிமாவிற்கே வந்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன். நான் வெற்றிமாறனிடம் நடிக்கப் போகிறேன் என்றதும் அவர் மறுத்தார். பின் இந்தக்கதைக்கு நீங்க சரியா இருக்க மாட்டீங்க என்றார். பிறகு ஒரு கேரக்டரை உருவாக்கி இருக்கிறார்கள். சமுத்திரக்கனி நடிக்க சம்மதிக்கா விட்டால் இந்தப்படம் உருவாகி இருக்காது.
இன்று சட்டமன்றக் கூட்டத்தொடர் இருக்கு. இருந்தாலும் ரொம்ப நாளைக்கு பிறகு படம் நடிப்பதால் இன்று இங்கு வந்தேன். நிகழ்ச்சித் தொகுப்பாளினி ரம்யா மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அறம் படத்தில் நடித்த நடிகை மிகச்சிறந்த நடிகை. மணிமாறன் சொன்னதை சொன்ன நேரத்தில் சரியாக எடுத்துள்ளார். என்னை பாடகனாக அடையாளப்படுத்தியவன் உதயா. இந்தப்படத்தின் வியாபாரத்தை வெற்றிமாறன் ஆல்ரெடி முடித்துள்ளார். நாளைக்கு எனது பிறந்தநாள். நான் 50 வயதுவரை வாழ்ந்ததே பெருசு தான். என் நண்பர்கள் வெற்றிமாறன், மணிமாறன், உதயகுமார் ஆகியோருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. எனக்குப் பிறந்தநாள் பரிசு இந்த சங்கத்தலைவன் படம் தான்” என்றார்.
சமுத்திரக்கனி பேசுகையில், “இறைவனுக்கு நன்றி. வெற்றிமாறனுக்கு நன்றி. விசாரணை படம் பண்ணும் போது திடீர்னு போன் பண்ணி கூப்பிட்டார். இதைப் பண்ணுங்க என்றார். அதேபோல் தான் இந்தப்படமும். வெற்றி என்னை அழைத்து குதி என்றால் குதித்து விடுவேன். நான் வியக்கக் கூடிய நண்பர்கள் மணிமாறனும் வெற்றிமாறனும் தான். பாரதி சார் எழுதிய தறியுடன் படைப்பு நல்ல படைப்பு. அதை அப்படியே ராவாக படைக்க வேண்டும் என்று இந்தப்படத்தை மணிமாறன் இயக்கியுள்ளார். கருணாஸ் எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் அவர் கதாபாத்திரம் வேற மாதிரி இருக்கும். தயாரிப்பாளர் உதய் சாரை இன்று தான் பார்க்கிறேன். அவருக்கு நன்றி. இசை அமைபாளர் ராபர்ட் பெரிதாக ஜெயிக்க வேண்டும். கைத்தறி சத்தத்தோடு தான் நான் வளர்ந்தேன். அது சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி.” என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “வெற்றிமாறன் சாரிடம் பாரதிராஜா சார் ஒரு புக் கொடுத்தார். வெற்றிமாறன் படித்துட்டு என்கிட்ட கொடுத்தார். நானும் படித்தேன். அந்த நேரத்தில் கருணாஸ் படம் நடிப்பதைப் பற்றிப் பேசினார். நான் இந்த நாவலை கருணாஸிடம் சொன்னேன். பின் சமுத்திரக்கனி சாரிடம் சொன்னேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. அப்படித்தான் படம் ஸ்டார்ட் ஆச்சு. இந்தப்படத்தில் எனக்கு நல்ல டீம் வாய்த்தது. கருணாஸ் வைத்து படம் எடுத்தால் ரிஸ்க் என்றார்கள். சுப்பிரமணிய சிவா சார் போராட்டம் சினிமாவில் தான் ஜெயிக்கும் என்றார். அது போலியான போராட்டம், ஆனால் நிஜமான போராட்டம் தோற்காது.” என்றார்.
வெற்றிமாறன் பேசுகையில், “இந்தப்படம் நண்பர்களின் கூட்டணி. நானும் மணிமாறனும் ஸ்கூல் டேய்ஸ்ல இருந்தே பிரண்ட்ஸ். கருணாஸும் உதய்யும் சிறு வயதில் இருந்தே பிரண்ட்ஸ். செல்வம் மகன் ராபர்ட்டை லயலாவில் சேர்த்துவிட்டோம். ராபர்ட்டை ரெண்டு ட்யூனைப் போடச் சொன்னேன். பிடித்திருந்தது. அதனால் இவரை இசை அமைக்கச் சம்மதித்தேன். வெறும் நட்பால் மட்டுமே ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது. இப்போ ஒரு படத்தை பொஸிசன் பண்றதே கஷ்டமா இருக்கு. அந்த வகையில் பொறுமையாக இருந்த உதயாவிற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இப்படி ஒரு கதையில் சமுத்திரக்கனி நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று அவரை அப்ரோச் பண்ணோம். சீனிவாசன் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது. பாரதிநாதன் நாவல் தான் இப்படம். அவருக்கும் நன்றி. எல்லா நிலைகளிலும், எல்லா சூழல்களிலும் இந்தப்படம் நன்றாக வந்ததிற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
படத்தின் இசையமைப்பாளர் ராபர்ட் சற்குணம் பேசுகையில், “நான் முதல் நன்றி ஜீவி சாருக்கு தான் சொல்லணும். அடுத்து வெற்றி சாருக்கு பெரிய நன்றி. சிறு வயதில் இருந்தே அவரது படங்களைப் பார்த்தே வளர்ந்திருக்கிறேன். இந்தப்படத்தைப் பற்றி சொல்வதை விட இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் வரியைச் சொன்னால் சரியாக இருக்கும். உரிமையை விட உயிரா பெரிது?" அனைவருக்கும் நன்றி” என்றார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...