தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜயின் திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருவதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்து வருகிறார்கள். எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற ‘பிகில்’ படமே வசூலில் பல சாதனைகள் படைத்தது என்றால், விஜய் தான் நம்பர் ஒன், என்றும் கூறி வருகிறார்கள்.
தொடர்ந்து தனது படங்களில் அரசியல் பேசி வருவம் விஜய்க்கு, அரசியலில் ஈடுபடுவதற்கான ஆசை இருப்பதாகவும், அதற்காக அவர் தற்போதே சில வேலைகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், சமீபத்தில் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்பட்டது, என்று பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்ததோடு, விஜய்க்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தனர்.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின், விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டதற்கு, “விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். அவர் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால், அவரை தாரளமாக வரவேற்க தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவரின் இந்த திடீர் ஸ்டேட்மெண்டால், தமிழக அரசியலில் புது பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு விஜய் குறித்து அதிமுக அமைச்சர் ஒருவரிடம் நிருபர்கள் கருத்து கேட்டதற்கு, விஜய் ரஜினிக்கு நிகரானவர் அல்ல, என்று கூறியதோடு, அஜித் தல, ரஜினி மல, மற்றவர்கள் யாரும் அவர்களுக்கு இணை இல்லை, என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...