தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, தமிழ் சினிமாவில் உள்ள சில முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதும் பாலியல் புகார் கூறினார். தெலுங்கு சினிமாவில் பாலியல் புகார் கூறிய ஸ்ரீரெட்டியை, அங்கிருந்து விரட்டியடிக்க, அவர் தற்போது சென்னையில் தஞ்சம் அடைந்திருப்பதோடு, இங்கேயே செட்டிலாவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
வீடு, சொகுசு கார் என்று ஆடம்பரமாக சென்னையில் வசிக்கும் ஸ்ரீரெட்டி, சில படங்களிலும் நடித்து வருகிறார். அதே சமயம், அவ்வபோது தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தொடர்ந்து இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் பற்றி பாலியல் புகார்கள் மற்றும் அவர்களது அந்தரங்க விஷயங்கள் பற்றி பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், தெலுங்கு குணச்சித்திர நடிகை கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குநர் ராகேஷ் இருவரும் பல பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கி வருவதாக, ஸ்ரீரெட்டி, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த தகவலால் தெலுங்கு சினிமாவில் பெரும் சர்ச்சை வெடித்திருக்கும் நிலையில், இதில் சம்மந்தப்பட்ட நடிகையும், நடன இயக்குநர் ஸ்ரீரெட்டி மீது கடும் போபத்தில் இருக்கிறார்கள்.
மேலும், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்திருக்கும் நடிகை கல்யாணியும், நடன இயக்குநர் ராகேஷும், எந்த ஆதாரமும் இல்லாமல், தங்கள் மீது சமூக வலைதளத்தில் ஸ்ரீரெட்டி அவதூறு பரப்பி வருகிறார், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்கள்.
இந்த புகாரின் பேரில் ஸ்ரீரெட்டி மீது வழக்கு பதிவு செய்திருக்கும் போலீஸார், அவரை கைது செய்யவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...