ஆணவக் கொலைகளை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘கன்னி மாடம்’, அனைத்து தரப்பு மக்களிடையும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிகமான திரையரங்குகளில் வெளியாகி, அரங்குகள் நிறைந்த காட்சிகளாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சென்னை ஏ வி எம் ராஜேஷ்வரி திரையரங்கில் ரசிகர்களோடு ரசிகர்களாக படம் பார்த்த படக்குழுவினர் அனைவரும், அவர்களோடு படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
வெற்றியை மிகப்பெரும் கேக் வெட்டி, ரசிகர்களுக்கு கொடுத்தும், படக்குழுவினர் அனைவரும் பகிர்ந்தும் தங்களது வெற்றியை கொண்டாடினர்.
மேலும், இவ்விழாவில் இசையமைப்பாளர் ஹரீஷ் சாய், ஒளிப்பதிவாளர் இனியன் ஜே ஹரீஷ், ரோபோ ஷங்கர், ஆகியோரும் உடன் இருந்தனர்
ரூபி பிலிம்ஸ் ஹஷீர் தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்தி, சாயா தேவி, விஷ்ணு ராமசாமி, ஆடுகளம் முருகதாஸ், ப்ரியா ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்திருக்கும் ‘கன்னி மாடம்’ படம் தமிழகத்தை உலுக்கிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...