Latest News :

விஜய்க்காக உருவாகும் ‘மெட்ரோ ரயில்’ நிலையம்!
Monday February-24 2020

‘கைதி’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள்ளாகவே வியாபாரம் முடிந்துவிட்டதால், விஜயின் மார்க்கெட் உயர்ந்திருப்பதாகவும், அடுத்தப் படத்திற்கு அவருக்கு ரூ.100 கோடி சம்பளம் பேசி முடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில், ‘மாஸ்டர்’ படப்பிடிப்புக்காக சென்னையில் மெட்ரோ ரயில் நிலையம் செட் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக இதுவரை 17 பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மெட்ரோ ரயில் நிலையத்தையே செட் போடப்படுவது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இதுவரை எந்த ஒரு படத்திற்காகவும் மெட்ரோ ரயில் நிலையம் செட் போடப்பட்டதில்லையாம். அந்த வகையில், மெட்ரோ ரயில் நிலையம் செட் போடுவது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.

 

விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா, சாந்தனு, விஜே ரம்யா, மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ், மாளவிகா மேனன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

Related News

6241

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery