அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதி மாடர்ன் கடவுள், என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், விமர்சன ரீதியாகவும் பாராட்டு பெற்றதை தொடர்ந்து, படம் இரண்டாவது வாரத்தை கடந்து வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ‘ஓ மை கடவுளே’ படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ.10 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறு முதலீட்டு படம் இத்தனை கோடி வசூலித்திருப்பது என்பது, சினிமா வியாபாரிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. படம் வெளியான சில தினங்களுக்குப் பிறகு, பத்திரிகையாளர்களின் முன்னிலையில் ‘ஓ மை கடவுளே’ குழு வெற்றியை கொண்டாடினார்கள். அதில் கலந்துக் கொண்ட பிரபல விநியோகஸ்தர் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், ‘ஓ மை கடவுளே’ இன்னும் ஐந்து வாரங்களுக்கு மல்டி பிளக்ஸ்களில் வசூலில் புதிய சாதனை படைக்கும், என்று நம்பிக்கையோடு தெரிவித்தார். வரது நம்பிக்கையை நிஜமாக்கிய விதத்தில் தான் இந்த வசூல் அமைந்திருக்கிறது.
பல வருடங்களாக வெற்றிக்காக காத்திருந்த அசோக் செல்வனுக்கு இது மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருப்பதோடு, தமிழ் சினிமாவுக்கும், வியாபாரத்திற்கும் ஆரோக்யமான ஆரம்பமாகவும் அமைந்திருக்கிறது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...