‘தர்பார்’ படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் 168 வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரித்து வருகிறார். இதில் ஹீரோயின்களாக நயன்தாரா, மீனா, குஷ்பு ஆகியோர் நடிக்க, கீர்த்தி சுரேஷ் ரஜினியின் மகளாக நடிப்பதாக கூறப்படுகிறது. இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சூரி, சதிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மேலும் சில முன்னணி நடிகர்கள் இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ரமோஜிராவ் ஸ்டுடியோவில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று இப்படத்தின் தலைப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில், ரஜினியின் அறிமுக பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாட இருக்கிறாராம்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...