சினிமா நடிகைகள் மற்றும் நடிகர்கள் காலதாமதமாக முதல் திருமணம் செய்துக் கொண்டாலும், இரண்டாவது திருமணத்தை பொருத்தவரை காலதாமதம் செய்வதில்லை. அந்த வகையில், பிரபல நடிகர் ஒருவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த சில நாட்களிலேயே தனது இரண்டாவது திருமணம் குறித்து அறிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மலையாள சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் செம்பன் வினோத். 2010 ஆம் ஆண்டு வெளியான ‘நாயக்கன்’ என்ற மலையாலப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான செம்பன் வினோத், வில்லன், ஹீரோ, குணச்சித்திரம் என்று பல வேடங்களில் நடித்து வருகிறார். ’கோலிசோடா 2’ மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான இவர், அதன் பிறகு வேறு எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை. இதற்கிடையே அஜித்தின் ‘வலிமை’ படத்தில் செம்பன் வினோத் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அது வெறும் வதந்தி என்று படக்குழு கூறியதோடு, செம்பன் வினோத்தும் அதில் உண்மை இல்லை, ஆனால் வதந்தி உண்மையானால் சந்தோஷம், என்று கூறியிருந்தார்.
சுனிதா என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட செம்பன் வினோத், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுனிதாவை விவாகரத்து செய்துவிட்டார்.
இந்த நிலையில், மரியம் தாமஸ் என்ற சைக்காலிஜிஸ்ட்டை தனது சொந்த ஊரான கோட்டயத்தில் செம்பன் வினோத், இரண்டாவதாக திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
தற்போது ஃபாஹத் பாசில் நடிக்கும் ’ட்ரான்ஸ்’ என்ற படத்தில் நடித்து வரும் செம்பன் வினோத், சிறந்த நடிகருக்கான விருதை அவர் IFFK 2018 ல் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...