Latest News :

விஜய் படம் குறித்து பரவும் தவறான தகவல்!
Tuesday February-25 2020

விஜயின் ‘பிகில்’ வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அவரது அடுத்தப் படமான ‘மாஸ்டர்’ மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், ‘கைதி’ என்ற படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ், இப்படத்தை இயக்குவதாலும், இதில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாகவும், இதுவரை விஜய் படங்களுக்கு இல்லாத எதிர்ப்பார்ப்பு இப்படத்தின் மீது ஏற்பட்டிருக்கிறது.

 

இதற்கிடையே, படப்பிடிப்பு முடிவதற்குள்ளாகவே ‘மாஸ்டர்’ படத்தின் வியாபாரம் முடிந்துவிட்டது. இதனால் விஜயின் மார்க்கெட்டும் உயர்வடைந்துவிட்டதாம். இதனால், விஜய் தனது 65 வது படத்திற்கு ரூ.100 கோடி சம்பளம் வாங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், விஜயின் 65 வது படம் குறித்த தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, மாஸ்டர் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ், தான் விஜயின் 65 வது படத்தையும் இயக்கப் போவதாகவும், அவர் சொன்ன கதை ஒன்று விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

விஜயின் 65 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார், என்பதை கூற ஏற்றுக் கொள்ளலாம், ஆனால், அந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது, என்பது எந்த நேரத்திலும் நடக்காத ஒன்றாகும். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் நடிகர் சூர்யாவின் உறவினரான எஸ்.ஆர்.பிரபுவின் நிறுவனமாகும். இவர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரை வைத்து தான் தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார். வேறு சில வெளி ஹீரோக்களை இவர் வைத்து படம் தயாரித்தாலும், அவர்கள் அறிமுக நடிகர்கள் அல்லாது, வளரும் நடிகர்களை மட்டுமே வைத்து தயாரிப்பார்.

 

அதனால், விஜயின் 65 வது படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பது என்பது தவறான தகவலாகும்.

Related News

6246

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery