பிரபல இசையமைப்பாளர் ஞானி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘ஊர் சுற்றும் வாலிபன்’. இயக்குவதோடு இப்படதை தயாரித்து இசையமைத்து பாடல்களும் எழுதியிருக்கும் ஞானி, இப்படத்தின் மூலம் கல்வித்துறையில் உள்ள குறைபாடுகளைப் பற்றி பேச உள்ளார்.
சரியாக படிக்க முடியாத ஹீரோ, எதிர்காலத்தில் தனது உழைப்பால் உயரத்திற்கு செல்வதோடு, சிறப்பு விருந்தினராகவும் உருவெடுக்கிறார். அது எப்படி என்பது தான், இப்படத்தின் கதை.
தற்போதைய காலக்கட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையில் தனியாரின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதோடு, சரியான கல்வியும் இல்லாமல் போவதால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியாவது பற்றி இப்படத்தில் அழுத்தமாக பேசப் போகும் இயக்குநர் ஞானி, சமூகத்தில் நடக்கும் தவறுகளை இப்படத்தில் சுட்டிக்காட்டுவதோடு, அதற்கான தீர்வையும் வழங்குகிறார்.
இப்படத்தில் ஹீரோவாக புதுமுகம் ஒருவர் நடிக்க இருக்கிறார். ஹீரோயின்களாக 7 நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். 7 நடிகைகளும் ஏழு மாநிலத்தை சேர்ந்தவர்களாம். தற்போது ஹீரோ, ஹீரோயின்கள் தேர்வில் ஈடுபட்டிருக்கும் படக்குழுவினர், விரைவில் முழு விபரத்தையும் அறிவிக்க உள்ளனர்.
இப்படத்திற்கு மோசஸ் ஒளிப்பதிவு செய்ய, பன்னீர் செல்வம் எடிட்டராக பணியாற்றுகிறார். முருகமணி கலை இயக்குநராக பணியாற்றுகிறார். படத்தில் 7 பாடல்கள் இடம்பெறுகிறது. இயக்குநர் ஞானியுடன் இணைந்து முன்னாள் கல்வித்துறை அமைச்சர் வைகை செல்வன், சூர்யதாஸ், காதல் மதி ஆகியோரும் பாடல்கள் எழுதியுள்ளார்கள்.

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஞானி, இசையின் மீது உள்ள ஆர்வத்தினால் தான் சினிமா துறைக்கு வந்தார். இசைக் குடும்பத்தில் பிறந்த இயக்குநர் ஞானி, இதுவரை இரண்டு தெலுங்குப் படங்கள் மற்றும் இரண்டு தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்திருப்பதோடு, சீரியல்களில் இரண்டாயிரம் எப்பிசோட்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஜேடி-ஜெர்ரி உள்ளிட்ட பல இயக்குநர்களின் விருது படங்கள் மற்றும் விளம்பர படங்களுக்கு இசையமைத்துக் கொடுத்திருக்கும் இவர், பல இசை ஆல்பங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...