விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிவடையும் நிலையை எட்டியுள்ளது. இன்னும் 15 நாட்களே இருக்கும் நிலையில், போட்டியில் வெற்றி பெறுபவர்கள் யார்? என்ற எதிர்ப்பார்ப்பைக் காட்டிலும், தற்போது வெளியேறப் போகிறவர்கள் யார்? என்ற எதிர்ப்பார்ப்பே ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இந்த வாரம் வையாபுரி வெளியேற்றப்படுவார், என்று ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதேபோல் நேற்று வையாபுரி பிக் பாஸ் வீட்டில் இருந்து வித்தியாசமான முறையில் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, முதல் முறையாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேரடி இறுதிப் போட்டிக்கு செல்லும் வெற்றி டிக்கெட்டை சினேகனுக்கு வழங்கினார். ஏற்கனவே எலிமினேஷன் பட்டியலில் சினேகன், வையாபுரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் வெற்றி டிக்கெட்டை சினேகன் வாங்கியதையடுத்து அடுத்து வெளியேறப்போவது வையாபுரியா அல்லது ஆரவ்வா என்ற கேள்வி இருந்தது. இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வையாபுரி வெளியேறுவதாக வித்தியாசமாக தெரிவிக்கப்பட்டது. வையாபுரி வெளியேற்றப்பட்டதற்காக அவரது தோழியான நடிகை பிந்து மாதவி கண்ணீர் விட்டு அழுதார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...