பிக் பாஸ் மூலம் பிரபலமான இலங்கை தமிழரான தர்ஷன், தற்போது இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும், சில படங்களில் நடிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, தர்ஷனின் முன்னாள் காதலி சனம் ஷெட்டி அவர் மீது போலீசில் புகார் அளித்தது அனைவரும் அறிந்தது தான்.
இதற்கிடையே, சனம் ஷெட்டி குறித்து பல பகீர் குற்றச்சாட்டுகளை கூறிய தர்ஷன், தற்போது தனது சினிமா பயணத்தின் மீது கவனம் செலுத்தி வந்தாலும், சனம் ஷெட்டி அவ்வபோது தர்ஷன் பற்றிய பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அவருடன் நடித்த விளம்பர படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட சனம் ஷெட்டி, தனது காதல் பிரிவு குறித்து தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார்.
இந்த நிலையில், சனம் ஷெட்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஷெரீனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தர்ஷன், தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மற்றொரு பிக் பாஸ் பிரபலம் நடன இயக்குநர் சாண்டியின் நடனப் பள்ளியின் புதிய தளம் திறப்பு விழாவில் ஷெரீன், தர்ஷன், சரவணன் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். அப்போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சனம் ஷெட்டி விவகாரத்திற்குப் பிறகு ஷெரீனுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தர்ஷன் வெளியிட்டுள்ளதால், சனம் ஷெட்டியின் பதிவுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தர்ஷன், இந்த புகைப்படத்தை வெளியிட்டிருப்பதாக நெட்டிசன்கள் பேசி வருகிறார்கள். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தர்ஷனும், ஷெரீனும் நெருங்கி பழகிய நிலையில், சனம் ஷெட்டி தனது காதல் முறிவுக்கு காரணம் ஷெரீன் தான் என்று, மறைமுகமாக பேட்டிகளில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்,
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...